• May 17 2026

அடையாறு ஆற்றில் குதித்து உயிரிழந்தார் தயாரிப்பாளர் கே.ராஜன்.! தமிழ் திரையுலகில் அதிர்ச்சி

Aathira / 2 hours ago

Advertisement

Listen News!

1983 ஆம் ஆண்டு வெளியான பிரம்மச்சாரிகள் படத்தின் மூலம் தயாரிப்பாளராக அறிமுகமானவர்தான் கே.ராஜன். அதன் பிறகு நம்ம ஊரு மாரியம்மா படத்தின் மூலம் இயக்குநராக அவதாரம் எடுத்தார். அந்தப் படத்தில் சரத்குமார் மற்றும் நிழல்கள் ரவி ஆகியோர் நடித்திருந்தனர்.

இதைத்தொடர்ந்து, 2000ஆம் ஆண்டு விநியோகஸ்தர்கள் சங்கத் தலைவராக பொறுப்பேற்றார். ஆனாலும் அதற்கு பிறகு சக தயாரிப்பாளரை தாக்கியதற்காக கைது செய்யப்பட்டார். ஒரு சில திரைப்படங்களில் நடித்தும் உள்ளார்.


கடந்த 2023 ஆம் ஆண்டு வெளியான பகாசுரன் என்ற படத்தில் இறுதியாக நடித்திருந்தார். மேலும் நான்கு படங்களை தயாரித்துள்ளார். இரண்டு படங்களை இயக்கியுள்ளார்.

இந்த நிலையில், தமிழ் சினிமாவின் மூத்த தயாரிப்பாளரும் இயக்குநருமான கே.ராஜன், சென்னையில் உள்ள அடையாறு ஆற்றில் குதித்து உயிரிழந்தார். அவர் உயிரிழக்கும் போது அவருக்கு 85 வயது. இந்த வயதில் அவர் இவ்வாறு விபரீத முடிவு எடுத்து உயிரிழந்தது தமிழ் திரையுலகினருக்கு மிகப்பெரிய அதிர்ச்சியை கொடுத்துள்ளது

Advertisement

Advertisement