கேரள மாநிலத்தின் முதலமைச்சர் பினராயி விஜயன் சமீபத்தில் வெளியிட்ட கருத்துக்கள் சமூக வலைத்தளங்களில் பரபரப்பை ஏற்படுத்தி வைரலாகி வருகின்றன. இந்த சம்பவம், சினிமா ரசிகர்களிடையும் அரசியல் வட்டாரத்திலும் ஒரே நேரத்தில் கவனத்தை ஈர்த்துள்ளது.
முதலமைச்சர் பினராயி விஜயன், பிரபல நடிகர் மோகன்லால் நடத்திய பேட்டியில் கலந்து கொண்டார். பேட்டியின் போது சினிமா உலகம், தனிப்பட்ட அனுபவங்கள் மற்றும் அரசியல் தொடர்பான பல கேள்விகள் பேசப்பட்டன.

இந்த பேட்டியின் போது, முதலமைச்சர் பினராயி விஜயன் “ரஜினிகாந்தின் ஆக்சன் படங்களுக்கு நான் ரசிகன்.” என்று கூறியிருந்தார்.
தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பல தலைமுறை ரசிகர்களிடம் பிரபலமாக உள்ளார். அவரின் ஆக்சன் படங்கள், அதிரடி காட்சிகள் மற்றும் திரைத்திறன் உலகம் முழுவதும் புகழ்பெற்றவை என்பதும் குறிப்பிடத்தக்கது.
Listen News!