• Apr 17 2026

அவர் பார்க்காத பணமா? புகழா? - விஜய் அரசியலுக்கு வருவது இதற்காகத் தான்.! சிபி ராஜ் ஓபன்டாக்

shali / 1 month ago

Advertisement

Listen News!

நடிகர் விஜய்யின் அரசியல் என்ட்ரி குறித்து நடிகர் சிபிராஜ் தெரிவித்துள்ள கருத்துக்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன. சினிமாவில் உச்சத்தை எட்டிய நடிகர் ஒருவர், அனைத்தையும் விட்டு அரசியலுக்கு வருவது குறித்த விவாதங்கள் சூடுபிடித்துள்ள நிலையில், சிபி ராஜின் இந்த ஆதரவு கருத்து ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.


 சிபி ராஜ் அதன்போது, “விஜய் சார் சினிமாவுக்கு வாறன் என்று சொல்லவே அவர் மேல அவ்ளோ விமர்சனம் இருந்திச்சு. அதையெல்லாம் மீறி கஷ்டப்பட்டு போராடி பிடிச்ச ஒரு இடத்தை விட்டிட்டு அவர் அரசியலுக்கு வாறார். அவர் பார்க்காத புகழா? அவர் பார்க்காத பணமா? அவர் மக்களுக்கு நல்லது பண்ணத் தான் அரசியலுக்கு வாறார்.” என்று கூறியிருந்தார். 

இந்த வார்த்தைகள் சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவி வருகின்றன. விஜய் தனது திரையுலக வாழ்க்கையின் தொடக்கத்தில் பல விமர்சனங்களை சந்தித்தது ரசிகர்களுக்கு தெரிந்ததே. 

ஆரம்ப காலங்களில் அவரது நடிப்பு, நடன திறன் மற்றும் திரை வெளிப்பாடு குறித்து விமர்சனங்கள் எழுந்தன. ஆனால் காலப்போக்கில் அவர் தன்னை நிரூபித்துக் கொண்டு, தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக உயர்ந்தார். இதைத் தான் சிபி ராஜ் தனது கருத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.

Advertisement

Advertisement