தொழில் அதிபரும் நடிகருமான லெஜெண்ட் சரவணன் நடித்துவரும் ‘லீடர்’ திரைப்படம் தற்போது கோலிவுட்டில் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த படத்தை துரை செந்தில்குமார் இயக்கி வருகிறார். ஆக்ஷன் மற்றும் சமூக கருத்துகளை இணைக்கும் வகையில் இப்படம் உருவாகி வருவதாக கூறப்படுகிறது.

இந்த படத்தில் கதாநாயகியாக பயல் ராஜ்புத் நடித்துள்ள நிலையில், ஷாம் , ஆண்ட்ரியா, அமிர்தா அய்யர், வி.டி.வி. கணேஷ் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்தின் நட்சத்திர பட்டியல் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
‘லீடர்’ திரைப்படம் ஏப்ரல் 9ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது படத்தின் டிரெய்லர் வெளியிடப்பட்டுள்ளது. டிரெய்லரில் ஆக்ஷன் காட்சிகள், மாஸ் டயலாக்கள் மற்றும் பிரம்மாண்ட காட்சிகள் இடம்பெற்றுள்ளதால், ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
A storm has been unleashed! @yoursthelegend’s #LeaderActionTrailer is out now — the rise is unstoppable! 🥳💥#லீடர்ActionTrailer https://t.co/7piDT2JC3G
#లీడర్ActionTrailer https://t.co/rsF1qSuDge
#ലീഡർActionTrailer https://t.co/cdYJFWQNNI pic.twitter.com/lkk8TV8G2y
Listen News!