• Jul 18 2025

மன்னிப்பு கேட்க முடியாது! – தக் லைஃப் ரிலீஸ் நாளில் ரசிகர்கள் செய்த விசித்திரமான செயல்..

subiththira / 1 month ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் புரட்சிப் பாதையைத் தாண்டி, சமூகப் பார்வைகளிலும் அசுரன் போல நிற்கும் உலக நாயகன் கமல்ஹாசன், தற்போது “தக் லைஃப்” திரைப்படத்தின் மூலம் திரையுலகில் ஒரு புதிய அத்தியாயத்தை தொடங்கியுள்ளார். இன்று (ஜூன் 5, 2025) இந்த திரைப்படம் உலகமெங்கும் உள்ள  திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.


ஆரம்பத்திலிருந்தே எதிர்பார்ப்பை கிளப்பிய இந்தப் படம், மணிரத்னம் – ரஹ்மான் – கமல் கூட்டணியின் இணைப்பு என்பதாலேயே ரசிகர்களுக்கு மிகவும் முக்கியமானதாக இருந்தது. இதற்கு மேலாக, படத்தின் வெளியீட்டு நாளன்று "மன்னிப்பு கேட்க முடியாது" என்று எழுதிய சிறப்பான T- Shirt அணிந்து திரையரங்குகளுக்கு வந்த ரசிகர்கள், அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளனர்.

சென்னை, கோவை, மதுரை, திருச்சி மற்றும் பெங்களூர் உள்ளிட்ட பெரும் நகரங்களில் உள்ள திரையரங்குகளில் இன்று காலை முதல் ரசிகர்கள் குவிந்தனர். இதில் சிலர் சாதாரணமாகப் படத்திற்காக வந்திருந்தாலும், ஒரு குழு மிகவும் வித்தியாசமான மற்றும் தீவிரமான கருத்தை வெளிப்படுத்தும் முயற்சியில் வந்திருந்தனர்.


அவர்கள் அனைவரும் அணிந்திருந்த T-Shirtகளில் "மன்னிப்பு கேட்க முடியாது" என்ற வாசகம் பிரமாண்ட எழுத்துக்களில் பதிக்கப்பட்டிருந்தது. இந்த போட்டோ தற்பொழுது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.

Advertisement

Advertisement