பிக்பாஸ் நிகழ்ச்சி இன்று தமிழ் மக்கள் மத்தியில் வெறும் ரியாலிட்டி ஷோவாக இல்லாமல், உணர்வுகளின் அலைவீச்சாக மாறியிருக்கின்றது. பலர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தங்கள் வாழ்க்கையின் புதிய உறவுகளை கண்டுபிடித்து இருக்கின்றார்கள். அப்படியான நிகழ்ச்சியில் உருவான ஒரு அழகான காதல் ஜோடி தான் அமீர் மற்றும் பாவனி.
இவர்கள் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போது, முதலில் ஒரு நல்ல நட்பாக தொடங்கிய உறவு, காலப்போக்கில் காதலாக மலர்ந்தது. அதன் பின் பிக்பாஸ் முடிந்த பிறகும், இருவரும் தங்கள் உறவை தொடர்ந்தனர். தற்போது அவர்கள் திருமண பந்தத்தில் இணையவிருப்பதாக தகவல்கள் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கின்றன.
அமீர் மற்றும் பாவனி இருவரும் பிக்பாஸ் வீட்டில் நடந்தது போலவே, வெளியிலும் தங்கள் உணர்வுகளை வலுப்படுத்திக் கொண்டிருந்தனர். பிக்பாஸ் நிகழ்ச்சியில் பாவனிக்கு அமீர் அளித்த ஆதரவு, அவரிடம் காட்டிய அன்பு இவை அனைத்தும் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை அளித்தது.
அமீர் மற்றும் பாவனி இருவரும் துணிவு என்ற படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தனர். அஜித் குமார் நடிப்பில் வெளியான இந்தப் படம், இவர்களின் திரைபயணத்திற்கு ஒரு அழகான தொடக்கமாகவும் அமைந்திருந்தது.
சமீபத்தில் அமீர் மற்றும் பாவனி இருவரும் இணைந்து எடுத்த couple போட்டோஷூட்டினை அமீர் தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படங்கள் இப்பொழுது வைரலாகி சமூக வலைத்தளங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.
இந்த புகைப்படங்கள் வெளியாகி சில மணிநேரங்களிலேயே, இன்ஸ்டாவில் ஆயிரக்கணக்கான லைக்குகள் மற்றும் கமெண்ட்ஸ் என்பன குவிந்தன. பிக்பாஸ் நிகழ்ச்சியில் பல ஜோடிகள் உருவாகினாலும், அந்த உறவு நிகழ்ச்சிக்கு பிறகும் தொடர்ந்து என்பது குறைவாகவே இருந்தது. எனினும் அமீர் – பாவனி ஜோடி அப்படியில்லாது தங்களது காதல் வலிமையானது என்பதனை நிரூபித்துள்ளனர்.
Listen News!