• Apr 16 2026

'லால் சலாம்' திரைப்படத்திற்கு பிரம்மாண்ட வரவேற்பு! தன் மகள் ஐஸ்வர்யாவுக்கு விலையுயர்ந்த பரிசு கொடுத்த ரஜினி?

Aathira / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் அன்றும் இன்றும் என்றும் சூப்பர் ஸ்டாராக திகழ்பவர் தான் நடிகர் ரஜினிகாந்த். அவருக்கு இணை அவர் மட்டுமே என்ற வகையில் 70 வயதிலும் தில்லாக நடித்து வருகிறார்.

இவர் நடிப்பில் இன்றைய தினம் திரைக்கு வந்த திரைப்படம் தான் லால் சலாம். இந்த படத்தை ரஜினியின் மூத்த மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கியுள்ளார்.

இந்த படத்தில் ரஜினிகாந்த் , விஷ்ணு விஷால், விக்ராந்த் ஆகியோருடன் செந்தில், ஜீவிதா,தம்பி ராமையா,அனந்திகா சனில்குமார்,விவேக் பிரசன்னா, மற்றும் தங்கதுரை உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். 


இந்த நிலையில், லால் சலாம் படம் ரிலீஸ் ஆனதை முன்னிட்டு, தன் மகளுக்கு ரஜினி மிகவும் உருக்கமான பதிவு ஒன்றை  வெளியிட்டிருக்கிறார்.

அந்த பதிவில் ‘என் அன்பு தாய் ஐஸ்வர்யாவுக்கு என் அன்பு சலாம். உங்களுடைய லால் சலாம் திரைப்படம் மிகப்பெரிய வெற்றி அடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்’ என குறிப்பிட்டிருக்கிறார்.

இதன் மூலம், ரஜினியும் தன் மகளை தாய் என குறிப்பிட்டு தன் வாழ்த்துக்களை சொல்லிய நிலையில், இது ஐஸ்வர்யாவுக்கு கிடைத்த மிகவும் விலையுயர்ந்த பரிசு என ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகிறார்கள்.


Advertisement

Advertisement