• Jun 14 2026

ராதிகாவை பார்த்த அடுத்த நொடி... பாரதிராஜா அஞ்சலியில் நடந்த நெகிழ்ச்சி சம்பவம்...

Aathira / 4 days ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவின் இயக்குநர் இமயம் என போற்றப்படும் பாரதிராஜாவின் மறைவு திரையுலகையே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. அவரது உடலுக்கு திரையுலகினர், அரசியல் தலைவர்கள் மற்றும் ரசிகர்கள் தொடர்ந்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், நடிகையும் அரசியல்வாதியுமான ராதிகா சரத்குமார், பாரதிராஜாவின் உடலருகே மிகுந்த சோகத்துடன் அமர்ந்திருந்ததாக கூறப்படுகிறது. நீண்ட காலமாக திரையுலகில் அவருடன் நெருங்கிய உறவு கொண்டிருந்ததால், அவரது மறைவு ராதிகாவை மிகவும் பாதித்துள்ளதாக அங்கிருந்தவர்கள் தெரிவித்தனர்.


அதே நேரத்தில், பாரதிராஜாவுக்கு இறுதி அஞ்சலி செலுத்துவதற்காக வந்த தமிழ்நாடு முதலமைச்சர் விஜய், ராதிகாவை பார்த்தவுடன் அருகில் சென்று அவருக்கு ஆறுதல் கூறியுள்ளார்.

மேலும் மிகுந்த துயரத்தில் இருந்த ராதிகாவை கட்டியணைத்து, மன உறுதியுடன் இருக்குமாறு தேற்றிய அந்த தருணம் அங்கிருந்தவர்களை நெகிழ்ச்சியடையச் செய்துள்ளது.

பாரதிராஜாவின் மறைவு காரணமாக திரையுலகம் முழுவதும் சோகத்தில் மூழ்கியுள்ள நிலையில், அவரை இழந்த வேதனையை பகிர்ந்து கொள்ளும் பல்வேறு காட்சிகள் சமூக வலைதளங்களிலும் வைரலாகி வருகின்றன.

Advertisement

Advertisement