• Jun 14 2026

பாரதிராஜா மனைவி வந்ததும் ஆவேசமாக பேசிய கங்கை அமரன்.? இறுதி நிகழ்வில் பரபரப்பு

Aathira / 4 days ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவின் இயக்குநர் இமயம் பாரதிராஜாவின் மறைவு திரையுலகையே சோகத்தில் ஆழ்த்தியுள்ள நிலையில், அவரது இறுதி அஞ்சலி நிகழ்வில் நடந்த ஒரு சம்பவம் தற்போது சமூக வலைதளங்களில் பேசுபொருளாக மாறியுள்ளது.

பாரதிராஜாவின் இறுதி சடங்கில் திரையுலக பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் மற்றும் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், பாரதிராஜாவின் மனைவி அங்கு வந்தபோது இசையமைப்பாளரும் இயக்குநருமான கங்கை அமரன் உணர்ச்சிவசப்பட்டு பேசியதாக கூறப்படுகிறது.

அப்போது, "கடைசி நேரத்தில் யாருமே இல்லாமல் ஓடிப்போயிட்டீங்க... இப்போ அவர் அனாதையா போய்ட்டாரு " என்று கங்கை அமரன் ஆவேசத்துடன் கூறியுள்ளார், அந்த காட்சிகள் அங்கிருந்தவர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

பல ஆண்டுகளாக நீடித்த நட்பும், பாரதிராஜாவுடன் பகிர்ந்த நெருக்கமான உறவும் காரணமாக, கங்கை அமரன் மிகுந்த உணர்ச்சி வசப்பட்ட நிலையில் இவ்வாறு பேசியிருக்கலாம் என்றும் திரையுலக வட்டாரங்களில் பேசப்பட்டு வருகிறது.

இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வரும் நிலையில், பாரதிராஜாவின் மறைவு ஏற்படுத்திய வேதனை மற்றும் அவரது நண்பர்களின் உணர்ச்சி வெளிப்பாடுகள் ரசிகர்களை நெகிழ்ச்சியடையச் செய்து வருகின்றன.

Advertisement

Advertisement