• May 17 2025

எல்லையை மீறிய சந்தானம்..! ஆர்னால்ட் பட கதையை காப்பியடித்த இயக்குநர்..

Mathumitha / 4 hours ago

Advertisement

Listen News!

பிரேம் ஆனந்த் இயக்கத்தில் சந்தானம் நடிப்பில் ஆர்யா தயாரிப்பில் நேற்று வெளியாகிய DD Next Level திரைப்படம் சராசரி விமர்சனங்களை பெற்று வருகின்றது. படத்தில் இடம்பெற்ற "கோவிந்தா" பாடலை நீக்குமாறு பல விமர்சனங்கள் எழுந்தாலும் படக்குழு அதனை நீக்கியுள்ளது. ஆனாலும் கடவுள் பக்தி அதிகம் இருக்கும் சந்தானம் கொஞ்சம் எல்லையை மீறி இருக்கின்றாரோ என்று விமர்சனங்கள் எழுந்துள்ளது.


மேலும் இந்தப் படம் “DD Returns” படத்தின் அடுத்த கட்டமானதாகக் கருதப்படுகின்றது. ஹாரர் காமெடி என்றாலும், இதில் நவீன பாணியின் வேடிக்கை, மாஸான காட்சிகள் மற்றும் நகைச்சுவை அனைத்தும் கலந்து காணப்படுகின்றன.


இந்த நிலையில் 1993 இல் லாஸ்ட் ஆக்க்ஷன் ஹீரோ என்று ஒரு படம் வெளியாகியது. கிடைத்தட்ட அந்த படத்தை காப்பியடிச்சு இந்த படத்தை எடுத்திருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது. மேலும் படம் சந்தானம் எதிர்பார்த்த அளவுக்கு ஓடவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement