கடந்த ஏப்ரல் 10ம் தேதி முன்னணி நடிகர் அஜித் நடித்த "குட் பேட் அக்லி" படம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கிய இந்த படம் இந்த வருடத்தின் வெற்றிப் படங்களில் ஒன்றாகும். இப்படத்தின் மூலம் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் வெற்றிப் பட இயக்குநர்களின் பட்டியலில் இடம் பிடித்தார்.
இந்நிலையில் ஆதிக் ரவிச்சந்திரன் அஜித்தை வைத்து மீண்டும் ஒரு புதிய படத்தை இயக்க இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது . இதன் மூலம் அவரது இயக்கத்தில் அஜித் நடிக்கும் புதிய படத்தின் பெரும் எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.
மேலும் அவர் தனது அடுத்த இயக்கத்தில் மாஸ் ஹீரோவுடன் இணையப் போகின்றார். தெலுங்கு சினிமாவின் மாஸ் நாயகன் பாலகிருஷ்ணாவை வைத்து இப்படம் உருவாகும் என செய்திகள் பரவியுள்ளன. பாலையா அஜித்தின் குட் பேட் அக்லி படத்தை பார்த்துவிட்டு இயக்குநருக்கு அழைப்பு விடுத்துள்ளார். ஆதிக் நடிகர் பிரபுவுடன் சென்று பாலகிருஷ்ணாவை சந்தித்து பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.
Listen News!