சமூக வலைத்தளத்தில் வைரல் ஆகி வரும் செய்தி ஆர்த்தி மற்றும் ரவிமோகனுடைய விவாகரத்து விடயம் தான். தற்போது சமீப தினங்களுக்கு முன்னர் குடும்ப நலன் நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வருகின்றது.இந்த நிலையில் நீதி மன்றம் ரவிமோகனுக்கும் ஆர்த்தி ரவிக்கும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள தாக தகவல்கள் வெளியாகி உள்ளன .
அதாவது தங்கள் பிரச்சனை குறித்து ரவி மோகன் மற்றும் ஆர்த்தி சமூக வலைத்தளங்களில் அறிக்கை வெளியிடக்கூடாது என்று தடை விதித்துள்ளதாக செய்திகள் பரவி வருகின்றன .அதாவது தொடர்ந்து வழக்கு நடைபெற்று வரும் நிலையில், சட்டப்படி இருவரும் அமைதியை பேண வேண்டும் என்றும், ஊடகங்கள் வழியாக கருத்துக்கள் தெரிவிப்பதைத் தவிர்க்க வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக சமூக வலைத்தளங்களில் தகவல்கள் பரவி வருகின்றன .
இந்த வழக்கின் போது, நீதிமன்றம் இருவரும் சமரச பேச்சுவார்த்தை நடைபெற்று வரும் நிலையில் ஆர்த்தி அவர்கள் மாதம் 40 லட்ஷம் ஜீவனாம்சம் கேட்டு மனு தாக்கல் செய்துள்ளார். இந்த செய்தியும் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சி ஏற்பட்டிருந்த நிலையில் சமூக வலைத்தளங்களில ஆர்த்தி அவர்களுக்கு ஆதரவான கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.
Listen News!