• Aug 14 2025

வரலாற்றில் இடம்பிடித்த மம்முட்டி.! கல்லூரி பாடத்திட்டத்தில் சேர்க்கப்பட்ட நடிகரின் பெருமை!

subiththira / 1 month ago

Advertisement

Listen News!

மலையாள சினிமாவின் பெருமைமிகு நடிகராக, 50 ஆண்டுகளுக்கும் மேல் திரைத்துறையில் கலக்கிக் கொண்டிருக்கும் மெகா ஸ்டார் மம்முட்டி, இன்று ஒரு தனி மனிதனாக மட்டுமல்ல, "பாடம்" ஆகவும் ஆசிரியர்களால் கற்பிக்கப்படவுள்ள நிலையை  அடைந்துள்ளார்.


இதுவரை 400-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ள மம்முட்டியின் பங்களிப்பு, எர்ணாகுளத்தில் இருக்கும் புகழ்பெற்ற மகாராஜா கல்லூரியின் பி.ஏ வரலாறு (BA History) பாடதிட்டத்தில் History Of Malayalam Cinema என்ற பெயரில் அந்த பாடம் இடம்பெற்றுள்ளது. 

மகாராஜா கல்லூரியில் "History of Malayalam Cinema" என்ற தலைப்பில் அறிமுகமாகும் புதிய பாடத்திட்டத்தில், மலையாள திரையுலகின் வளர்ச்சியிலும், மாற்றங்களிலும் முக்கிய பங்கு வகித்த மம்முட்டி பற்றியும், அவர் ஆற்றிய சமூக மற்றும் கலாச்சார தாக்கங்களைப் பற்றியும் விரிவாக கற்பிக்கப்படவுள்ளது.


மம்முட்டியின் திரைப்பயணம் பாடமாக கற்பிக்கப்படுவதால், இந்தியா முழுவதும் அவரை நேசிக்கும் ரசிகர்கள் இது மிகப்பெரிய சாதனை என்றும், இது அவரின் நடிப்பின் அடையாளம் என்றும் பெருமையாக தெரிவித்து வருகின்றனர்.


Advertisement

Advertisement