• Apr 18 2026

'டபுள் ஐஸ்மார்ட்' திரைப்படத்தின் டீசர் வெளியானது! பட்டையை கிளப்பும் மாஸ் ஹீரோ...

Aathira / 1 year ago

Advertisement

Listen News!

நடிகர் ராம் பொதினேனி, சஞ்சய் தத் நடிப்பில் வெளியான திரைப்  படம் தான்  ’டபுள் ஐஸ்மார்ட்’. இந்த படம் பூரி ஜெகன்நாத், சார்மி கவுர், பூரி கனெக்ட்ஸ் தயாரிப்பில் தான் இந்திய படமாக உருவாகியுள்ளது.

இந்த நிலையில், நடிகர் ராம் பிறந்த நாளை முன்னிட்டு ‘டபுள் ஐஸ்மார்ட்’ படத்தின் டிமாக்கிகிரிகிரி டீசரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். தற்போது அது நல்ல வரவேற்பை பெற்று வருகின்றது.

இந்த படத்தில் காவியா தபார் கதாநாயகியாக அறிமுகமாகியுள்ளார். அத்துடன் நடிகர் சஞ்சய் தத்தும் பவர்ஃபுல்லான மாஸ் என்ட்ரி கொடுத்துள்ளார். இந்த படத்தில் அதிரடியான கிளைமேட் காட்சிகள் உள்ளதாக கூறப்படுகின்றது. அத்துடன் பிரம்மாண்டமான சிவலிங்கமும், கிளைமேக்ஸ் சண்டை நடக்கும் காட்சியும் பார்வையாளர்களை மெய்சிலிர்க்க வைத்துள்ளதாம்.


இந்தப் படத்தில் இயக்குனர் பூரி ஜெகனார் படத்தின் ஹீரோவை ஸ்டைலிஷ் மட்டும் அதிரடி நாயகனாக மாஸ்கொடுத்து திரையில் காண்பித்துள்ளார். அத்துடன் சஞ்சய் தத்தும் ஸ்ட்ராங்கான வில்லனாக நடித்துள்ளார். இதன் நாயகி காவியா கவர்ச்சி நாயகியாக வலம் வந்துள்ளார்.

தற்போது இந்த திரைப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி உள்ளிட்ட மொழிகளில் வெளியாகின்றதாம். இந்த படத்தின் டீசர்  ரசிகர்களை மட்டுமின்றி வர்த்தக வட்டாரத்திலும் குறித்த எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்து  உள்ளமை குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement