• Aug 28 2025

தமிழக வெற்றி கழக மாநில செயற்குழு கூட்டம் ஜூலை 4...!விஜயின் அதிகாரபூர்வமான அறிவிப்பு...!

Roshika / 2 months ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரும் தமிழக வெற்றி கழகத்தின் தலைவராகவும் வலம் வருபவர் நடிகர் விஜய் இவளை பல திரைப்படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் நிலைத்து விட்டார். தற்போது  தனது மாநில செயற்குழு கூட்டத்தை ஜூலை 4ஆம் திகதி நடைபெறவுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு ஒன்று  வெளியாகி உள்ளது. 


விஜய், தனது ரசிகர்களுடன் கட்சி சார்பான ஒருங்கிணைப்பு அமைப்புகளை பல வருடங்களாக வைத்திருந்தார். 2024ஆம் ஆண்டு ஜனவரியில், திடீரென அரசியலில் கால் வைத்ததாக அறிவித்து, தமிழக வெற்றி கழகம் (TVK) எனும் புதிய கட்சியை அறிவித்தது தமிழக அரசியலுக்கு ஒரு முக்கிய திருப்பமாக அமைந்தது. அவர் கூறியது போல, “பணியால் மக்கள் நம்பிக்கையோடு நிற்பார்கள் பேச்சால் அல்ல” என்ற சூத்திரத்தை பின்பற்றி, நிதானமான நகர்வுகளுடன், வெற்றி கழகம் கட்டமைக்கப்பட்டு வருகிறது.


தமிழக வெற்றி கழகத்தின்  மாநில செயற்குழு கூட்டம், 2025 ஜூலை 4, வெள்ளிக்கிழமை அன்று நடைபெற உள்ளது. இந்த கூட்டம் சென்னை அருகே உள்ள ஒரு தனியார் அரங்கத்தில் நடைபெறவுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த கூட்டம் மிகவும் முக்கியமானதாக இருப்பதால், அரசு மற்றும் தனியார் பாதுகாப்பு குழுக்கள் முழுமையாக செயல்படுத்தப்படுகின்றன. ஊடகங்கள் மட்டுப்படுத்தப்பட்டளவில் அனுமதிக்கப்படலாம் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.


நடிகர் விஜய் தலைமையில் நடைபெறும் ஜூலை 4 மாநில செயற்குழு கூட்டம் வெற்றி கழகத்தின் வளர்ச்சிக்கே , தமிழக அரசியலின் புதிய அத்தியாயத்திற்கும் கதவுகளைத் திறக்கவிருக்கிறது. சினிமாவில் மட்டுமல்ல, மக்கள் வாழ்விலும் 'விஜய்' வெற்றி பெறுவாரா? என்ற கேள்விக்கான பதில், இந்த கூட்டத்தின் முடிவுகளிலும், எதிர்கால நகர்வுகளிலும் கிடைக்கும். என எதிர்பார்க்கபடுகின்றது. 

Advertisement

Advertisement