• Aug 08 2025

தமிழ் தான் என் வீடு... ஹிந்தி சினிமா எனக்கு வேண்டாம்பா.! – உணர்ச்சிவசப்பட்ட சிம்ரன்!

subiththira / 2 months ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமா ரசிகர்களின் இதயங்களில் நிழலாக வாழும் நடிகையாக சிம்ரன் விளங்குகின்றார். 90களில் திரையுலகில் புயலைக் கிளப்பி, அதன் பிறகு திடீரென ஒதுங்கியிருந்தாலும் தற்போது மீண்டும் தன் நடிப்பின் அழகைக் காட்டிவருகின்றார்.


அண்மையில் ஒரு நேர்காணலில் கலந்து கொண்ட சிம்ரன், "தனது வாழ்க்கைப் பயணம், தமிழ் திரையுலகம் மீதான பாசம் மற்றும் ஹிந்தி சினிமாவில் வாய்ப்புகள் இருந்தும் ஏன் நடிக்கணும் என்று தோணல.." என்பன  குறித்து மிக நேர்மையாகவும் உணர்வுபூர்வமாகவும் பேசியுள்ளார்.

சிம்ரன் கூறியதாவது,“நான் தமிழில் இருந்து ஹிந்திக்கு போய் வேலை பண்ணனும் என்று ஒருபோதும் நினைத்துப் பார்த்ததில்லை. தமிழில் நடிப்பது எனக்கு செளகர்யமாக இருக்கு. இது எங்க வீடு மாதிரி இருக்கு. எல்லாம் இயல்பா நடக்குது.” என்றார்.


அந்த நேர்காணலின் போது சிம்ரன், “தமிழில் வேலை செய்யும் மனிதர்கள் எல்லாரும் ரொம்ப சிம்பிள். பெரிய ஸ்டார் ஆக இருந்தாலும் கூட, சினிமா துறையில் உள்ள மனிதர்கள் மிகுந்த மனப்பான்மையோடு நடந்துகொள்கிறார்கள். அதுதான் எனக்கு பிடிக்கிற விஷயம்.” எனவும் தெரிவித்திருந்தார்.

சிம்ரனுக்குப் பல ஹிந்தி பட வாய்ப்புகள் வந்திருந்தன. ஹீரோயினாக, மற்றும் முக்கியமான துணைவேடங்களாக பணியாற்றும் வாய்ப்புகள் இருந்தாலும், சிம்ரன் தன்னுடைய பயணத்தை தமிழில் மட்டுமே தொடர விரும்பினார்.


Advertisement

Advertisement