• Jul 18 2025

பட்டு வேட்டியில் சூர்யா, மணப்பெண் கோலத்தில் ஜோதிகா.. மறுபடி கல்யாணமா?

Sivalingam / 1 year ago

Advertisement

Listen News!

நடிகர் சூர்யா மற்றும் நடிகை ஜோதிகா ஆகிய இருவரும் கடந்த 2006 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்ட நிலையில் 18 ஆண்டுகள் கழித்து தற்போது மீண்டும் கிட்டத்தட்ட மணக்கோலத்தில் இருக்கும் போட்டோஷூட் புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

பட்டு வேஷ்டி பட்டு சட்டையுடன் சூர்யா, மணப்பெண் போல் அலங்காரம் செய்த ஜோதிகா என இருவரும் இந்த போட்டோஷூட்டில் உள்ள புகைப்படங்களை பார்க்கும்போது ரசிகர்கள் இந்த புகைப்படங்களுக்கு ஏராளமான கமெண்ட்களை பதிவு செய்து வருகின்றனர்.

மிகவும் அன்பான அழகான ஜோடிகள் என்றும், இருவரும் மிகவும் பொருத்தமான ஜோடிகள் என்றும், மறுபடியும் திருமணம் செய்ய போகிறீர்களா என்றும், திருமணம் ஆன போது எப்படி இருந்தீர்களோ அதே போல் தான் 18 ஆண்டுகள் கழித்து இப்பவும் இருக்கிறீர்கள் என்றும் ஜோதிகாவை பார்க்கும் போது குந்தவையை நேரில் பார்த்தது போல் இருக்கிறது என்றும்,  பல கமெண்ட்கள் பதிவாகி வருகிறது.

 இந்த நிலையில் இந்த பதிவுக்கு நடிகை ஜோதிகா ’ஒன்றா இரண்டா ஆசைகள், எல்லாம் சொல்லவே ஒரு நாள் போதுமா’ என்ற சூர்யாவுடன் இணைந்து நடித்த ’காக்க காக்க’ திரைப்படத்தில் இடம்பெற்ற பாடலின் வரிகளை பதிவு செய்துள்ளார். இந்த போட்டோஷூட் புகைப்படங்களை ஜோதிகா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்து ஒரு சில மணி நேரங்களே ஆகியுள்ள நிலையில் 18 லட்சத்திற்கும் அதிகமான லைக்ஸ் குவிந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement