• May 17 2025

வசூலில் ரெட்ரோவை ஓவர்டேக் செய்த "டூரிஸ்ட் பாமிலி"..! – வைரலாகும் ஸ்ரீதரனின் கருத்துக்கள்..

subiththira / 10 hours ago

Advertisement

Listen News!

கடந்த மே 1ம் திகதி ஒரே நாளில் இரு திரைப்படங்கள் திரையரங்குகளில் வெளியாகியிருந்தன. அதில் ஒன்று  "டூரிஸ்ட் பாமிலி" மற்றது "ரெட்ரோ" திரைப்படமாகும். இந்த இரண்டு திரைப்படங்களும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் எந்த திரைப்படம் வசூல் ரீதியில் முன்னிலையில் உள்ளது என்பது குறித்த தகவல் தற்பொழுது சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது. 


கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வெளியான "ரெட்ரோ" படத்தில் பூஜா ஹெக்டே கதாநாயகியாக நடித்துள்ளார். இந்தப் படத்திற்கு முதல் நாளே நல்ல வரவேற்பு கிடைத்தது. எனினும் சில விமர்சகர்கள் அப்படத்திற்கு எதிர்மறையான விமர்சனங்களைப் பகிர்ந்திருந்தனர். 

அதே நாளில் வெளியான "டூரிஸ்ட் பாமிலி " படத்தினை இயக்குநர் அபிஷன் ஜீவந்த் உருவாக்கியிருந்தார். இந்தப் படத்தில் சசிகுமார் மற்றும் சிம்ரன் ஜோடியாக நடித்திருந்தனர். இப்படத்திற்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்ததுதான் வசூல் ரீதியிலும் சாதனை படைத்திருந்தது.

 

அந்த வகையில் இதில் எந்த திரைப்படம் வசூல் ரீதியில் முன்னிலையில் உள்ளது என்று தமிழ் நாடு திரையரங்க உரிமையாளர்கள் ஸ்ரீதரன் மேடை நிகழ்வொன்றில் பேசும் போது கூறியுள்ளார். அதன் போது அவர், இந்த வருடம் வெளியான திரைப்படங்களில் "டூரிஸ்ட் பாமிலி " தான் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது என்றதுடன் ரெட்ரோவை விட இதுவே முன்னிலையில் உள்ளது எனவும் கூறியுள்ளார். இத்தகவல் தற்பொழுது வைரலாகி வருகின்றது.

Advertisement

Advertisement