• Apr 27 2025

சீரியல் நடிகர் ஸ்ரீதர் திடீர் மரணம்..! சோகத்தில் சின்னத்திரை வட்டாரங்கள்...

Mathumitha / 3 weeks ago

Advertisement

Listen News!

சின்னத்திரை நடிகர் ஸ்ரீதர் தற்போது 62 வயதில் திடீரென மரணமடைந்துள்ளதால் அவரது ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். விஜய் டிவியில் பிரபலமான "செல்லம்மா" தொடரில் நடித்த இவர் பல சின்னத்திரை தொடர்களில் குணச்சித்திர ரோல்களில் நடித்துள்ளார். மேலும் இவர் zee தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் வள்ளியின் வேலன் தொடரில் நடித்து வருகின்றார்.


இவர் இன்று மாரடைப்பால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெறும்போது சிகிச்சை பலன் இல்லாமல் உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது. ஜி தமிழ் சேனல் அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளத்துடன் ரசிகர்களும் சமூக வலைத்தளங்களில் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

மேலும் இவரது இறுதி சடங்கு குறித்து எதுவித அறிவிப்பும் இன்னும் வெளியாகவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.ஸ்ரீதரின் மறைவு சின்னத்திரை உலகுக்கு மிகப்பெரிய இழப்பாக மாறியுள்ளது.

Advertisement

Advertisement