தமிழ் சினிமாவின் ரசிகர்கள் மனதில் எளிமையான காமெடி மற்றும் திறமையான நடிப்பால் ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தவர் தான் சிவகார்த்திகேயன். திரைப்படங்களில் மட்டுமல்ல, உண்மை வாழ்க்கையிலும் அவரது மென்மையான வார்த்தைகள், குடும்பத்தின் மீது கொண்ட பாசம் என்பவற்றின் மூலம் அவர் ரசிகர்களிடம் தனித்துவமான இடத்தை உருவாக்கியுள்ளார்.
இந்நிலையில், இன்று தனது தாயாரின் பிறந்த நாளையொட்டி, இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்ட ஒரு புகைப்படம் தற்போது சமூக வலைத்தளங்களில் பெரும் கவனத்தை பெற்றிருக்கிறது. சிவகார்த்திகேயன் தனது தாயுடன் எடுக்கப்பட்ட புகைப்படத்தை பகிர்ந்து, அதனுடன் கூறியுள்ள வரிகள் ரசிகர்களை பிரமிக்க வைத்துள்ளன.
அதன்போது சிவகார்த்திகேயன் "அடுத்திங்கு பிறப்பொன்று அமைந்தாலும், நான் உந்தன் மகனாகப் பிறக்கின்ற வரம் வேண்டுமே.. அதை நீயே தருவாயே.. அம்மா என்றழைக்காத உயிரில்லையே! அம்மாவை வணங்காது உயர்வில்லையே…" எனக் கூறியிருந்தார்.
இந்த வார்த்தைகள் ஒரு கவிதையாகத் தோன்றினாலும், உண்மையில் அது ஒரு மகனின் உள்ளத்தின் ஆழத்திலிருந்து வரும் உணர்வின் வெளிப்பாடாகும். இந்த பதிவை பார்த்த ரசிகர்கள் பலரும் தாங்கள் சின்ன வயதில் தங்களின் தாயாரோடு கொண்ட அனுபவங்களை நினைத்து உருகியுள்ளனர்.
Listen News!