• Apr 27 2025

சிவகார்த்திகேயன் நடிக்கும் ‘பராசக்தி’ ...– இலங்கைக்குச் செல்லும் படக்குழுவினர்..!

subiththira / 2 months ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவின் வெற்றி நாயகனாகவும் திகழும் சிவகார்த்திகேயன், தனது 25வது படமான ‘பராசக்தி’ மூலம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளார். பிரபல இயக்குநர் சுதா கொங்கரா இயக்கத்தில் உருவாகும் இப்படத்தில், சிவகார்த்திகேயனுடன் ஜெயம் ரவி, அதர்வா, ஸ்ரீலீலா உள்ளிட்ட பிரபல நடிகர்கள் இணைந்து நடித்துள்ளனர்.

இப்பொழுது, இந்தப் படத்தின் அடுத்த கட்டப்படப்பிடிப்பு இலங்கையில் நடைபெறவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ‘சூரரைப் போற்று’ படம் மூலம் மாபெரும் வெற்றி கண்ட இயக்குநர் சுதா கொங்கரா இந்தப் படத்தையும் அதிகம் நம்பிக்கையுடன் உருவாக்கி வருகிறார். 


இப்படத்தினை படக்குழுவினர் தற்போது இலங்கையின் பிரபலமான இடங்களில் படப்பிடிப்பு நடத்த திட்டமிட்டுள்ளனர். இந்த படத்தின் முக்கியமான ஆக்சன் சீன்கள் மற்றும் முக்கிய காட்சிகள் என்பன இலங்கையில் எடுக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இந்திய திரைத்துறைக்கு இது மிகப்பெரிய சாதனையாகும் என்றே கூறலாம். 

ஏனென்றால் இலங்கையில் நடைபெறும் படப்பிடிப்புகள் ரசிகர்கள் மத்தியில் சுவாரஸ்யத்தை அதிகரித்துள்ளது.தமிழ் சினிமாவின் மிகப்பெரிய நட்சத்திரங்கள் ஒன்று சேரும் ‘பராசக்தி’ சிவகார்த்திகேயனின் 25வது படப்பிடிப்பில் பெரிய திருப்புமுனையாக இருக்கும் என பலரும் நம்புகின்றனர்.

Advertisement

Advertisement