தமிழ் சினிமாவில் சிம்புவும் கெளதம் மேனனும் என்றாலே அது ஒரு கிளாசிக்கான காம்பினேஷன். ‘விண்ணைத் தாண்டி வருவாயா’, ‘அச்சம் என்பது மடமையடா’, 'வெந்து தணிந்தது காடு' எனத் தொடர்ந்து வெற்றிப் படங்களில் இவர்களது கூட்டணி ரசிகர்களின் மனதைக் கொள்ளை கொண்டது.
அந்த வகையில், சிம்பு சமீபத்தில் DD Next Level பட விழாவில் கலந்து கொண்டிருந்தார். அதில் தன்னுடன் சேர்ந்து நடித்த கெளதம் மேனன் குறித்து சுவாரஸ்யமான தகவலைப் பகிர்ந்தார். அவர் கூறியதாவது, "கெளதம் மேனன் அந்தப் படத்தில் ஒரு பெண்ணைக் காதலிக்கின்றார். இருவரும் கடற்கரையில் ஓடி ஆடி விளையாடுற மாதிரியான சீனை இயக்குநர் உருவாக்கியிருந்தார்." என்று கூறினார் சிம்பு.
மேலும், "கெளதம் மேனன் சாரை இப்படி பண்ணுவீங்க என்று நான் கொஞ்சம் கூட எதிர்பார்க்கவே இல்ல" என்றும் தெரிவித்திருந்தார். இத்தகவல் தற்பொழுது சமூக ஊடகங்களில் வைரலாகி வருகின்றது. இதைப் பார்த்த பலரும் ஒவ்வொரு விதமான கருத்துக்களைப் பரப்பி வருகின்றனர்.
Listen News!