தமிழ் சினிமாவில் எப்போதும் வித்தியாசமான நடிப்பு, இசை மற்றும் ரசிகர்களிடம் உள்ள தனிப்பட்ட விருப்பம் என்பன மூலம் பெயர்போன நடிகர் சிம்பு, தற்போது "தக் லைஃப்" படத்தின் டிரெய்லர் விழாவில் பங்கேற்று ரசிகர்களின் மனங்களைக் கைப்பற்றியுள்ளார். சமீபத்தில் நடைபெற்ற இந்த பிரமாண்ட நிகழ்ச்சியில் அவர் கலந்து கொண்ட போது அங்கு நடந்த ஒரு சம்பவம் தற்போது இணையத்தில் பரவி ரசிகர்கள் மத்தியில் பெரும் வைரலாகியுள்ளது.
நிகழ்ச்சியின் நடுவே சில ரசிகர்கள் மற்றும் நடுவர், சிம்புவிடம் ஒரு சிறப்பு கோரிக்கை ஒன்றினை வைத்தனர். அது என்னவென்றால், "வல்லவன்" படத்தின் மூலம் சூப்பர் ஹிட்டான பாடல்களில் ஒன்றான “லூசு பெண்ணே லூசு பெண்ணே…” என்ற பாடலை பாடுமாறு கேட்டிருந்தனர்.
இதை கேட்ட சிம்பு எந்தவிதமான தயக்கமும் இல்லாமல், ரசிகர்களுக்காக அந்தப் பாடலின் இரண்டு வரிகளை பாடியுள்ளார். அவரது குரலில் அந்த வரிகள் ஒலிக்க ஆரம்பித்ததும், மொத்த அரங்கமே சத்தமாக கைதட்டியது. சிலர் தொலைபேசியில் வீடியோ எடுத்துக் கொண்டிருந்தனர். அவர் பாடும் போது அங்கு இருந்தவர்களின் முகத்தில் சந்தோசம் தெரிந்தது.
இந்த நிகழ்வுக்குப் பிறகு, சிம்புவிடம் அதைப் பற்றிய கருத்து கேட்டபோது, “இந்தப் பாடல் என்னுடைய வாழ்க்கையிலும் ஒரு முக்கியத்துவம் வாய்ந்தது. அந்த காலகட்டத்தில் என் குரலில் வெளியான இந்தப் பாடல் தான் அதிகளவான ரசிகர்களுக்கு பிடித்திருந்தது. இப்போதும் அதை நினைவுபடுத்தி கேட்டதற்காக நன்றி. உங்கள் அன்பே என் ஊக்கம்” என்று தெரிவித்திருந்தார். இந்த வீடியோ தற்பொழுது சமூக ஊடகங்களில் வைரலாகி வருகின்றது.
Listen News!