• Apr 17 2026

’சிறகடிக்க ஆசை’ மீனா கர்ப்பமா? வைரல் புகைப்படங்களால் பரபரப்பு..!

Sivalingam / 2 years ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும்சிறகடிக்க ஆசைசீரியலில் மீனா கேரக்டரில் நடித்து வரும் கோமதி பிரியா கர்ப்பமாக இருப்பது போன்ற புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருவதை அடுத்து பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

 விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும்சிறகடிக்க ஆசைசீரியல் மிக குறைந்த காலத்திலேயே டிஆர்பியில் முன்னணி இடத்தை பெற்று வருகிறது என்பதும் குறிப்பாக இந்த சீரியலில் நடித்து வரும் முத்து, மீனா ஆகிய இரண்டு கேரக்டர்களும் பார்வையாளர்கள் மனதை தொட்டுவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.


 இந்த நிலையில் தற்போது தான் சீரியல் விறுவிறுப்பான கட்டத்தை எட்டி உள்ள நிலையில் கர்ப்பமாக இருப்பது போன்ற புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. ஏற்கனவே அண்ணாமலையின் அம்மா முதலில் கர்ப்பமாகும் பேத்திக்கு ஒரு சிறப்பு பரிசு தருவதாக  கூறியிருந்த நிலையில் மீனா தான் முதலில் கர்ப்பமாக உள்ளாரா என்று கமெண்ட் குவிந்து வருகிறது.

 ஆனால் அதே நேரத்தில்சிறகடிக்க ஆசைதமிழ் மட்டுமின்றி மலையாளத்திலும் கோமதி பிரியா நடித்து வருகிறார் என்பதும் அது மட்டுமின்றி சில குறும்படங்களிலும் நடித்து வருகிறார் என்பதால் அதில் ஏதாவது ஒரு கேரக்டர் கர்ப்பம் ஆகும்படி இருந்திருக்கும் என்றும் தமிழ்சிறகடிக்க ஆசைசீரியலில் இப்போதைக்கு மீனா கர்ப்பமாக வாய்ப்பு இல்லை என்றும் கூறப்பட்டு வருகிறது.  

Advertisement

Advertisement