பழம்பெரும் பின்னணி பாடகி ஆஷா போஸ்லே உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் என்ற தகவல் வெளியாகி ரசிகர்களை கவலையடையச் செய்தது. 92 வயதான இவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதாக கூறப்பட்டு, மும்பையில் உள்ள மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டதாக செய்திகள் பரவின.

இந்நிலையில்,ஆஷா போஸ்லே மறைந்தார் என்ற செய்தி வெளியாகி திரையுலகில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்திய இசைத்துறையில் பல தசாப்தங்களாக தனது குரலால் ரசிகர்களை கவர்ந்த இவர், 20-க்கும் மேற்பட்ட மொழிகளில் ஆயிரக்கணக்கான பாடல்களை பாடி தனித்துவமான இடத்தை பிடித்துள்ளார்.
அவரது மறைவுக்கு பல்வேறு பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக, இசையமைப்பாளர் ஏ. ஆர். ரஹ்மான் தெரிவித்த இரங்கல் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. “அவர் தன் குரலுடனும், ஆளுமையுடனும் என்றென்றும் வாழ்கிறார். மிகவும் அற்புதமான கலைஞர்.” என்று அவர் பதிவிட்டுள்ளார்.
இந்த பதிவு சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. ஆஷா போஸ்லேவின் மறைவு, இந்திய இசை உலகிற்கு ஈடு இணையற்ற இழப்பாக பார்க்கப்படுகிறது. அவரின் குரலும், பாடல்களும் தலைமுறைகளை தாண்டி என்றும் வாழும் என்பதில் எந்த ஐயமும் இல்லை.
Listen News!