• Apr 16 2026

சிக்கன் குழம்பு சாப்பிட வந்திருக்கேன்!- மதுரையில் பிரதீப் ரங்கநாதன் அடித்த லூட்டி..

shali / 3 days ago

Advertisement

Listen News!

இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில், நடிகர் பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் சமீபத்தில் வெளியான LIK திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. இப்படத்தின் புரமோஷன் பணிகளுக்காக பிரதீப் ரங்கநாதன் மதுரைக்கு வருகை தந்தார். 


அப்போது செய்தியாளர்களை சந்தித்த அவர், “நான் மதுரைக்கு சிக்கன் குழம்பு சாப்பிடத் தான் வந்திருக்கிறேன். இங்குள்ள அனைத்து விதமான உணவுகளும் எனக்கு மிகவும் பிடிக்கும். மதுரை சாப்பாட்டுக்கு நான் பெரிய ரசிகன்,” என்று சிரிப்புடன் தெரிவித்தார்.

தொடர்ந்து படம் குறித்து பேசிய அவர், “நாம் எதிர்பார்த்ததை விட படம் மிகவும் நன்றாக வந்துள்ளது. இன்று மதுரையில் படம் வெளியாகியுள்ள திரையரங்குகளுக்கு சென்று ரசிகர்களின் வரவேற்பைப் பார்க்க உள்ளேன்.” என்றார். மேலும், படத்தில் சீமான் வரும் காட்சிகள் மிகவும் சிறப்பாக அமைந்துள்ளதாகவும் கூறினார்.

இதற்கிடையில், ஜனநாயகன் திரைப்படம் இணையத்தில் லீக் ஆனது குறித்து அவர் வருத்தம் தெரிவித்தார். “இது மிகவும் தவறான செயல். தயவுசெய்து லீக் ஆன படங்களை பார்க்காமல், மக்கள் திரையரங்குகளில் சென்று ஆதரவு அளிக்க வேண்டும்.” என்று கேட்டுக் கொண்டார். அவரது இந்த கருத்துக்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.

Advertisement

Advertisement