• May 23 2025

அக்காவின் திருமண கொண்டாட்டத்தை சுக்குநூறாக உடைக்கும் சத்யா! அடிதடியில் குதிப்பாரா முத்து?

Aathira / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சிறகடிக்க ஆசை சீரியலில் அடுத்து என்ன நடக்கும் என்பதற்கான ப்ரோமோ வெளியாகி உள்ளது. 

அதில் தற்போது முத்து மீனாவின் முதலாம் ஆண்டு திருமண நாள் கொண்டாட்ட விழா நடைபெறுகின்றது. அதற்காக முத்துவின் பாட்டியும் அங்கு வந்துள்ளார்.

இதன் போது தனது திருமண நாளை முன்னிட்டு மீனாவுக்கு மோதிரம் போடுகிறார் முத்து. இதனை விஜயா முகம் சுழித்துக் கொண்டு பார்க்கிறார். ஆனாலும் பாட்டி நல்லா இருக்குது என்று சொல்லுகிறார்.


இதை அடுத்து சத்யாவிடம் பேசிய சிட்டி, இன்டைக்கு உன்ட  அக்காட திருமண நாள் தானே. மாமா மச்சான் உறவு என்றா  சும்மா இல்லை என்று சொல்லி, அவரிடம் காசு கொடுத்து ஏதாவது வாங்கிச் செல்லுமாறு அனுப்புகிறார். சிட்டியுடன் இருந்த ரவுடிகள் ஏன் இப்படி பண்ணினா என்று கேட்க, சத்யா அங்கு போனா குடும்பத்துல பிரச்சினை வரும். அவங்க சந்தோசமா இருக்கக் கூடாது என்று சொல்லுகிறார்.

அதுபோலவே சத்யாவும் முத்து மீனாவின் திருமண நாள் கொண்டாட்டத்தில் கலந்து கொள்வதற்காக அங்கு செல்லுகிறார். இதை பார்த்து எல்லாரும் அதிர்ச்சியாக இருக்கிறார்கள். சத்யாவை பார்த்த முத்து கோபமாக கிளம்புகிறார். இதுதான் தற்போது வெளியான ப்ரோமோ.

Advertisement

Advertisement