தமிழ் சினிமாவில் சமீபத்தில் வெளியான 'டூரிஸ்ட் ஃபேமிலி' படம் செம்ம ஹிட் அடித்து 3வது வாரத்தையும் வெற்றிகரமாக கடந்துள்ளது. உலகம் முழுவதும் ரூ. 75 கோடி வசூலை தாண்டி படத்தைத் தயாரித்த இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் மற்றும் குழுவினர் பெரும் மகிழ்ச்சியில் உள்ளனர்.
இந்த வெற்றியை தொடர்ந்து தற்போது சசிகுமார் நடிப்பில் உருவாகியுள்ள 'ப்ரீடம்' திரைப்படம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. ஜூலை 10ம் தேதி படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 'கழுகு' படத்தின் மூலம் கவனம் பெற்ற சத்ய சிவா இப்படத்தை இயக்கியுள்ளார். சசிகுமாருடன் லிஜோமோஸ் ஜோஷ் கதாநாயகியாக நடிக்க, பாலிவுட் நடிகர் சுதேவ் நாயர் வில்லனாக நடித்துள்ளார்.
இந்தப் படம் 90களில் இலங்கையில் நடந்த உண்மையான சம்பவத்தை அடிப்படையாக கொண்டதாகவும் ராஜீவ் காந்தியின் மரணத்தில் முக்கியமான மனித வெடிகுண்டு பெண்ணின் கதையை மையமாகக் கொண்டுள்ளதாக டீசர் மூலம் தெளிவாகியுள்ளது.தற்போது படத்தின் படப்பிடிப்பு முடிந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. 'ப்ரீடம்' ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ வெற்றியைத் தொடருமா என ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர்.
Listen News!