தமிழ் சினிமாவின் பழம்பெரும் நடிகை சரோஜாதேவி 87 வயதில் இன்று(14) காலை காலமான செய்தி வெளியானதிலிருந்து, திரையுலகமே சோகத்தில் மூழ்கியுள்ளது.

தமிழ் சினிமாவில் அபிநய சரஸ்வதி, கன்னடத்து பைங்கிளி என பல பெயர்களை பெற்றவர் பழம்பெரும் நடிகை சரோஜா தேவி.
கன்னடத்தில் கடந்த 1955 இல் வெளியான மகாகவி காளிதாஸ் என்ற படத்தின் மூலம் அறிமுகமான அவர், தமிழில் ஜெமினி, சாவித்ரி நடித்த திருமணம் என்ற படத்தின் மூலம் அறிமுகமானார்.
தொடர்ந்து தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி என 200 படங்களுக்கும் மேல் நடித்துள்ள சரோஜா தேவி தமிழ் சினிமாவில் சிறந்த ஒரு நடிகையாக வலம் வந்தார்.

இவ்வாறு பல திரைப்படங்களில் நடித்து இன்று திரையுலகை தவிக்க விட்டு காலமாகியுள்ளார்.
இந்நிலையில் அவரது மறைவுக்கு அரசியல், சினிமா, கலை இலக்கியத் துறைகளில் இருந்து பலர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் அவரது உடல், பெங்களூரு மல்லேஸ்வரத்தில் உள்ள இல்லத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.
நாளை காலை 11 மணிவரை அங்கு பொதுமக்கள் இறுதி அஞ்சலி செலுத்த ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இதன்பின்னர் இறுதி ஊர்வலம் புறப்பட்டு, மல்லேஸ்வரம் அருகே கொடிஹள்ளி தோட்டத்தில் அவரது கணவரின் கல்லறைக்கு அருகே மதியம் 12 மணிக்கு இறுதிச் சடங்கு நடைபெறும் என்றும் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
Listen News!