• Jul 14 2025

"என் வாழ்க்கை ஒரு பாடம் தான்"...! வனிதா விஜயகுமார் மனம் திறந்து பேசிய நேர்காணல்

Roshika / 3 hours ago

Advertisement

Listen News!

நடிகை மற்றும் தொலைக்காட்சி பிரமுகர் வனிதா விஜயகுமார் சமீபத்தில் ஒரு நேர்காணலில் தனது வாழ்க்கை பயணம், குடும்பம், மனவேதனை, மற்றும் தனக்குள் வளர்ந்த உறுதியைப் பற்றிய உணர்வுபூர்வமான உரையாடலை பகிர்ந்துள்ளார்.


“நான் ஒரு சந்தோஷமான திருமண வாழ்க்கையில்தான் இருந்தேன். ஆனா தேவையில்லாத வெளிச்சேர்க்கைகள், பொறாமை, சுயநல தீர்மானங்கள் ” என வனிதா தன்னுடைய திருமண வாழ்க்கை தோல்விக்கு காரணங்களை பகிர்ந்தார்.

தனது குழந்தைகள் மீது மிகுந்த பெருமை கொள்கிறார் வனிதா. மகள் ஜோவிகா இன்று ஒரு தயாரிப்பாளராக வளர்ந்துள்ள நிலையில், மகன் ஸ்ரீஹரி ஒரு நடிகராக களம் இறங்கியுள்ளார். “அவங்க நிஜமா கஷ்டத்தைப் பார்த்து வளர்ந்தாங்க. அந்த அனுபவம் தான் அவங்களை today this responsible ஆக்கிச்சு,” என்றார் வனிதா.


ஸ்ரீஹரி விஜய் சார் ரசிகன் என்றதும், ஒரு குறிப்பிட்ட நினைவையும் பகிர்ந்தார். “அவனோட இரண்டாவது பிறந்தநாளுக்கு விஜய் நேர்ல வந்தார். அவனுக்கு நம்பவில்லை. 2–3 மணி நேரம் முழுமையா அவரோட நேரம் செலவழிச்சார்,” என நெகிழ்ந்து கூறினார். 

ரஜினிகாந்த் அவர்களுடன் இருந்த நெருக்கத்தைப் பற்றியும், "ரஜினி அங்கிள் எனக்காக ‘சந்திரலேகா’ படத்தின் ஸூட்டிங்க் ஸ்பாட்டில்  இருந்து, என்கிட்ட ஒரு தந்தைபோல பாசம் காட்டினாரு," என்று வனிதா கூறினார். அவரது வார்த்தைகள், அவரது கண்ணீரை அடக்க முயற்சி செய்த ஒரு மகளின் உணர்வாக இருந்தது.


தனது குறைந்த வயதில் நடந்த தவறுகள், முடிவுகள், ஏமாற்றங்கள் அனைத்தையும் உணர்ந்து, அதனால்தான் இன்று ஒரு வலிமையான பெண்ணாக இருக்கிறேன் என கூறினார். "நான் கொஞ்சம் இன்னசென்டா இருந்தேன். அதனால்தான் நிறைய ஏமாந்தேன். ஆனா அதுதான் எனக்கு ஒரு பாடம்."

இன்றைய இளைஞர்கள் மீது அவ்வளவு நம்பிக்கை வைத்திருக்கும் வனிதா, "பிள்ளைகள் யாராக வேண்டுமானாலும் ஆகட்டும். இசை, சினிமா, வழக்குரைஞர் – என்ன பிடிக்குதோ அதில வளரட்டும். நாம என்ன பண்ணணும்னு திணிக்கக் கூடாது," என உறுதியோடு கூறினார்.


வனிதா விஜயகுமாரின் இந்த உரையாடல், அவர் எதிர்கொண்ட கடினங்களை மட்டுமல்லாமல், அந்த கடினங்கள் எவ்வாறு அவரை துள்ளலாக மாற்றின என்பதை வெளிப்படுத்துகிறது. உணர்ச்சிகரமான ஆனால் உறுதியான ஒரு வாழ்க்கைபாதை எனக் கூறியிருந்தார். 

Advertisement

Advertisement