• Jul 18 2025

இலங்கைக்கு வருகை தந்த சரிகமப லிட்டில் சாம்ப்ஸ்...!ரசிகர்களின் அமோக வரவேற்பு...!

Roshika / 3 weeks ago

Advertisement

Listen News!

இந்தியாவின் பிரபல தொலைக்காட்சியான ஜீ தமிழ் தயாரித்து வழங்கும் நிகழ்ச்சியான Sa Re Ga Ma Pa L'il Champs  நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர்கள்  திவினேஷ் ,யோகாஸ்ரீ, சஞ்சிதா எனப் பலரும் சற்று முன்னர் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்துள்ளனர். அவர்கள்  விமான நிலையத்திற்கு வருகை தந்த  வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில்  வைரலாகி வருகின்றது. மேலும் VJ அர்ச்சனா அவர்களும் வருகை  தந்திருந்தார். 


இந்தியாவிலிருந்து விமானம் மூலம் யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்த அவர்களை பெருந்திரளான மக்கள் பூங்கொத்து கொடுத்தும் பூக்களை சொரிந்தும் வரவேற்றனர். யாழில் இடம்பெறவுள்ள இசை நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்வதற்காகவே அவர்கள் யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.


இந்த நிலையில் நாளைய தினம் இந்த இசைநிகழ்ச்சி நடை பெற இருப்பததாக கூறியிருந்தனர். மேலும் இதனைப்பார்த்த ரசிகர்கள் தங்கள் வாழ்த்துக்களை சமூக வலைத்தளத்தில் மூலமாக தெரிவித்து வருகின்றனர். 



Advertisement

Advertisement