• Apr 27 2025

'ஆம்பள 2' காமெடியனாக கலக்க 10 கோடி கேட்கும் சந்தானம்.. வெளியான தகவல்

Aathira / 2 months ago

Advertisement

Listen News!

கடந்த 2015 ஆம் ஆண்டு காமெடி கலந்த ஆக்சன் படமாக வெளியான திரைப்படம் தான் ஆம்பள. இந்த படத்தை சுந்தர் சி இயக்க நடிகர் விஷால் தயாரித்து நடித்திருந்தார். இந்த படம் வெளியாகி கிட்டத்தட்ட 10 ஆண்டுகளை கடந்துள்ளது.

ஆம்பள திரைப்படத்தில் விஷாலுடன் ஹன்சிகா, வைபர், சதீஷ், சந்தானம், பிரபு, ரம்யா கிருஷ்ணன், ஐஸ்வர்யா, கிரண், விஜயகுமார் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் நடித்திருந்தார்கள். மேலும் இதில் ஹிப் ஹாப் தமிழா ஆதி  இசைக் கலைஞராக அறிமுகமானார்.

ஆம்பள படம் வெளியான போது ஐ மற்றும் ஜிவி பிரகாஷின் டார்லிங் படமும் வெளியாகி இருந்தது. அந்தப் படங்கள் கலவையான விமர்சனங்களை பெற்றிருந்தாலும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று குடும்பங்கள் கொண்டாடும் திரைப்படமாக ஆம்பள திரைப்படம் வெற்றி பெற்றது.


இதைத்தொடர்ந்து சுந்தர் சி, விஷாலின் கூட்டணியில் மதகஜராஜா திரைப்படம் கிட்டத்தட்ட 12 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த ஆண்டு பொங்கலை குறி வைத்து ரிலீஸ் ஆனது. இந்த படம் மாபெரும் வெற்றி பெற்றது. இதற்கான வெற்றி கொண்டாட்டங்களும் நடைபெற்றன.

இந்த நிலையில் சுந்தர் சி - விஷால் மீண்டும் கூட்டணி அமைக்க உள்ளனர். அதன்படி இவர்களுடைய கூட்டணியில் ஆம்பள 2 திரைப்படம் தயாரிக்கப்பட உள்ளது. 

மேலும் இதில் சந்தானம் காமெடியனாக களம் இறங்க உள்ளாராம். எனினும் அவர் இந்த படத்திற்கு 10 கோடி கேட்பதாகவும் கூறப்படுகின்றது. ஆனாலும் பட குழுவினர் அவரிடம் எட்டு கோடி ரூபாய்க்கு சம்பளம் பேசி இந்த படத்திற்கு காமெடியனாக களம் இறக்க திட்டம் போட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி  உள்ளன.

Advertisement

Advertisement