• May 14 2026

விஜய் முதல்வரா? விசிக முடிவிற்கு காத்திருக்கும் நேரத்தில் சமுத்திரகனியின் வார்த்தை வைரல்

shali / 5 days ago

Advertisement

Listen News!

தமிழக சட்டசபை தேர்தலில் நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் 108 இடங்களில் வெற்றி பெற்றது அரசியல் வட்டாரத்தில் பெரிய கவனத்தை ஈர்த்துள்ளது. ஆனால் ஆட்சியமைக்க தேவையான 118 எம்.எல்.ஏ.க்கள் என்ற பெரும்பான்மையை எட்ட இன்னும் சில இடங்கள் தேவைப்படுவதால், கூட்டணி மற்றும் ஆதரவு பேச்சுவார்த்தைகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. 


இந்த சூழலில் காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (சி.பி.ஐ.), மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி (சி.பி.எம்.) ஆகியவை தவெகவுக்கு ஆதரவு அளிப்பதாக அறிவித்துள்ளன. இதன் மூலம் தவெகவின் பலம் 116 ஆக உயர்ந்துள்ளது. 

இன்னும் 2 இடங்களை பெற்றுள்ள விசிக தனது நிலைப்பாட்டை அறிவிக்க உள்ளதால் அரசியல் பரபரப்பு அதிகரித்துள்ளது. மேலும், இரண்டு தொகுதிகளில் வெற்றி பெற்ற விஜய், திருச்சி கிழக்கு தொகுதியை ராஜினாமா செய்ய இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த நிலையில் திருப்பதியில் சாமி தரிசனம் செய்த நடிகரும் இயக்குநருமான சமுத்திரக்கனி, விஜய்க்கு தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில், “பல தடைகளை தாண்டி ஆட்சி அமைக்க இருக்கும் என் அன்பு சகோதரர் தளபதி விஜய்க்கு மனமார்ந்த வாழ்த்துகள். இனி பல சவால்கள் வரும். அவற்றை எல்லாம் சமாளித்து தமிழகத்திற்கு சிறந்த ஆட்சியை வழங்க வேண்டும் என்று இறைவனிடம் பிரார்த்திக்கிறேன்.” என தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement