• Aug 05 2025

கண்கவரும் கறுப்பு உடையில் ஹாட் லுக்..!இன்ஸ்டாவில் வைரலாகும் சாக்ஷி அகர்வால் போட்டோஸ்...!

Roshika / 3 hours ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவிலும், தமிழ் ரசிகர்கள் மத்தியிலும் தனக்கென ஒரு முத்திரை பதித்துள்ளவர் நடிகை சாக்ஷி அகர்வால். கணிசமான எண்ணிக்கையிலான படங்களில் நடிக்கவில்லை என்றாலும், அவர் நடித்த சில படங்களின் வாயிலாகவே ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றார். அதனுடன், பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று, தனது ஸ்டைலிஷ் தோற்றம், திறமையான பேச்சுத்திறன் ஆகியவற்றால் மக்களிடம் பரிச்சயமான முகமாக மாறினார்.


பிக் பாஸ் நிகழ்ச்சிக்குப் பிறகு இவர் அதிகமான திரைப்படங்களில் நடிப்பாரென எதிர்பார்க்கப்பட்ட நிலையில், சமீபத்தில் தனது திருமண புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்ததன் மூலம் ரசிகர்களுக்கு ஒரு இனிய அதிர்ச்சியை அளித்தார். அந்த புகைப்படங்கள் வைரலாகி பெரும் கவனத்தை பெற்றன.


இந்த நிலையில், தற்போது சாக்ஷி அகர்வால் கறுப்பு நிற அழகிய உடையில் எடுத்துள்ள சில கவர்ச்சியான புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி, மீண்டும் ஒரு முறை இணையத்தை தெறிக்கவிட்டுள்ளன. படங்களில் அவரது ஸ்டைலிஷ் போஸ், ஹாட் அவுட்ஃபிட் மற்றும் மின்னும் முகஅலங்காரம் ரசிகர்களை பெரிதும் கவர்ந்துள்ளது.



Advertisement

Advertisement