• May 15 2026

உருப்படியா எதாவது பண்ணுங்க! - போன் பயன்படுத்தும் இளைஞர்களுக்கு RJ பாலாஜி கொடுத்த அட்வைஸ்

shali / 2 months ago

Advertisement

Listen News!

தமிழ் திரையுலகில் இயக்குநர் மற்றும் நடிகராகத் திகழும் RJ பாலாஜி சமீபத்தில் வெளியிட்டுள்ள கருத்து தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இன்றைய தலைமுறையினரின் கைபேசி பயன்பாடு குறித்து அவர் கூறிய உரை, பலரிடமும் சிந்தனையை ஏற்படுத்தியுள்ளது.

அதாவது, “இன்னைக்கு நம்ம எல்லார் கிட்டயும் போன் இருக்கு. அதை வைச்சு நாம என்ன வேணா பண்ணலாம். ஆனால் அதை எப்படி பயன்படுத்திக் கொள்ளுறோம் என்பது தான் முக்கியம். 


சென்னை மழை வெள்ளம் வந்தப்போ நிறைய தன்னார்வலர்கள் களத்தில இறங்கி உதவி செய்தாங்க. அப்படி உதவி செய்ய வந்தவங்க எல்லாரும் அவங்க கையில இருந்த போனைத் தான் சரியான வழியில பயன்படுத்தினாங்க. போனை வைச்சு எவ்வளவோ செய்ய முடியும். அதனால அதை வைத்து ஏதாவது உருப்படியா பண்ணுங்க...” என அவர் தெரிவித்துள்ளார்.

இன்றைய காலத்தில் ஸ்மார்ட்போன் என்பது வெறும் தொடர்பு சாதனமாக இல்லாமல், தகவல் பரிமாறும்  மையமாக மாறியுள்ளது. ஆனால் அதைப் பயன்படுத்தும் விதமே முக்கியம் என்று அவர் கூறியுள்ளார். இந்த வரிகள் இளைஞர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன.

Advertisement

Advertisement