• May 15 2026

ஜனநாயகனுக்கு நாங்க எப்படி குரல் கொடுக்க முடியும்..? – விஷாலின் அதிரடி பேச்சு

Aathira / 2 months ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் இந்த ஆண்டு பல கோடி ரசிகர்களின் எதிர்பார்ப்பாக காணப்பட்ட படம் விஜயின் இறுதிப் படமான ‘ஜனநாயகன்’ திரைப்படம். 

இந்த படம் பொங்கல் தினத்தை முன்னிட்டு வெளியாக இருந்தது. ஆனால், படத்தின் சென்சார் போர்டு பிரச்சினையால் ரிலீஸ் தேதி தொடர்ந்து தள்ளிப் போய்க் கொண்டே வந்தது.

ஜனநாயகன் படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிப்போனதை முன்னிட்டு பல படங்கள் பொங்கல் தினத்தில் போட்டிக்கு வந்தன. எனினும், பராசக்தி திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை.

இந்த நிலையில், 'ஜனநாயகன்' படத்தின் சென்சார் விவகாரம் குறித்து நடிகரும் தயாரிப்பாளருமான விஷால் அளித்த பேட்டி தற்போது வைரலாகி வருகிறது. அதில் அவர் கூறியதாவது,


'ஜனநாயகன் படத்தின் சென்சார் பிரச்சினைக்கு நான் ஒருவரோ அல்லது சிலர் மட்டும் குரல் கொடுப்பது முக்கியமில்லை. எல்லோரும் சேர்ந்து குரல் கொடுக்க வேண்டும். தயாரிப்பாளர்கள் சங்கத்தில் மொத்தமாக 1519 பேர் இருக்கிறார்கள். அவர்கள் அனைவரும் ஒன்றாகச் சேர்ந்தால் சென்சார் போர்டில் என்ன பிரச்சினை.? ஏன்  இப்படி நடக்கிறது என்பதை பேச முடியும்.

ஆனால் வழக்கு நீதிமன்றத்திற்கு சென்றதால் நாங்கள் தலையிட முடியாது. நீதிமன்றத்தில் வழக்கு இருக்கும்போது நாங்கள் எப்படிப் பேச முடியும்? தயாரிப்பாளர்கள் கூட சங்கத்தை அணுகியிருந்தால் ஏதாவது செய்ய முடிந்திருக்கலாம்.

7 கோடிக்கும் அதிகமான மக்கள் பார்க்கும் ஒரு திரைப்படத்தை சென்சார் போர்டில் நான்கு அல்லது ஐந்து பேர் சேர்ந்து முடிவு செய்வதில் எனக்கு உடன்பாடு இல்லை. ஆனாலும் அது விதிமுறை என்பதால் அதை ஏற்றுக்கொள்ள வேண்டியதுதான்.

மேலும், இந்த விவகாரம் தொடர்பாக தயாரிப்பாளரும் எங்களை அணுகவில்லை. வழக்கு நீதிமன்றத்தில் இருக்கும்போது நாங்கள் எப்படி குரல் கொடுக்க முடியும்?' என்றார்.

Advertisement

Advertisement