• May 03 2025

இலங்கை வசூலில் கெத்துக் காட்டிய "ரெட்ரோ"..!முதல் நாளே இத்தனை கோடியா..?

subiththira / 12 hours ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழும் சூர்யா, தனது கலைப்படைப்புகளால் மட்டுமல்லாது, ரசிகர்களின் ஆதரவாலும் பாக்ஸ் ஆபிஸில் அசத்தி வருகின்றார். அவரது படமென்றாலே ரசிகர்கள் தியட்டர்களில் படைகளாகக் குவிந்து கொண்டாடுவது வழக்கம். தற்போது, கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் வெளியாகியுள்ள ‘ரெட்ரோ’ படமும் அதற்கும் விதிவிலக்கு அல்ல.

இது வரை தனது தனித்துவமான கதைகளால் ரசிகர்களிடம் மிகுந்த வரவேற்பைப் பெற்ற இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ், ‘ரெட்ரோ’ படத்தில் சூர்யாவுடன் இணைந்துள்ளார். இது அவர்களது முதல் கூட்டணியாகும். இந்த கூட்டணியின் முதல் அறிவிப்பே ரசிகர்களிடம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.


‘கங்குவா’ படத்திற்கு பிறகு சூர்யாவின் அடுத்த மிகப்பெரிய ரிலீஸாக ‘ரெட்ரோ’ விளங்கியது. குறிப்பாக, ‘கங்குவா’ படம் எதிர்பார்த்த அளவில் பாக்ஸ் ஆபிஸில் சாதிக்க முடியாததால், இந்த படம் மீதான எதிர்பார்ப்பு இரட்டிப்பாகவே இருந்தது.

படம் எதிர்பார்ப்பை கடந்தது என்பதை நிரூபிப்பது போலவே, முதல் நாளில் உலகம் முழுவதும் ரூ. 28.3 கோடி வரை வசூல் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது 2025ம் ஆண்டின் தமிழ் படத்திற்கு கிடைத்த மிகப்பெரிய ஓப்பனிங் வசூல்களில் ஒன்றாகும்.

விசேடமாக இலங்கையில் இந்த படம் எதிர்பார்த்ததை விட அதிக வரவேற்பைப் பெற்றுள்ளது. முதல் நாளிலேயே ரூ. 2.2 கோடி இலங்கை ரூபாவில் வசூல் செய்துள்ளதாக உறுதிப்படுத்தப்பட்ட தகவல் வெளியாகியுள்ளது. இது தமிழில் சினிமா படங்களுக்கான ஒரு முக்கியமான திருப்புமுனையாக காணப்படுகிறது.

Advertisement

Advertisement