சுந்தர்சி இயக்கத்தில் வடிவேலு சுந்தர்சி இணைந்து நடித்த "கேங்கேர்ஸ்" திரைப்படம் கடந்த வாரம் வெளியாகி ஓரளவு வரவேற்பை பெற்றது. ஏ. சி. ச. அருண்குமார் இப் படத்தை தயாரித்துள்ளதுடன் படத்தில் வடிவேலு ,வாணிபோஜன், கத்ரின் தெரேசா ஆகியோர் நடித்துள்ளனர்.
இந்த நிலையில் தற்போது சூர்யா நடிப்பில் "ரெட்ரோ " திரைப்படம் மற்றும் சசிகுமாரின் "டூரிஸ்ட் பேமிலி " போன்ற படங்கள் இன்று வெளியாகி உள்ளமையால் இந்த படத்திற்கான தியேட்டர் அளவு குறைந்துள்ளது. இருப்பினும் ரெட் ஜெயண்ட் மூவி படத்தை தயாரித்திருப்பதால் இந்த வாரம் வெளியாகவுள்ள படங்களிற்கு தியேட்டர் அளவு குறைந்துள்ளது.
இப்போது "கேங்கேர்ஸ்" படத்திற்கு பேமிலி ஆடியன்ஸ் வரத்தொடங்கி இருப்பதால் இப் படத்திற்கு இரண்டாவது வாரத்தில் 175-190 தியேட்டர்களில் இந்த படத்தை ஓடுவதற்கு ஒழுங்குபடுத்தி இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
Listen News!