• Aug 28 2025

"பூக்களே சற்று ஓய்வெடுங்கள் அவள் வந்துவிட்டால்"... எமி ஜாக்சனின் இரண்டாவது திருமண புகைப்படங்கள் இதோ...

subiththira / 1 year ago

Advertisement

Listen News!

தமிழில் 2010ஆம் ஆண்டில் வெளியான 'மதராசப்பட்டினம்' படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் எமி ஜாக்சன். இங்கிலாந்து மற்றும் அயர்லாந்திற்கு இடைப்பட்ட தீவான Isle of Manயில் பிறந்த எமி ஜாக்சன், தமிழ் மட்டுமின்றி இந்தி, தெலுங்கு, கன்னடம் மற்றும் ஆங்கில மொழிப்படங்களில் நடித்து பிரபலமானார். 


2015ஆம் ஆண்டு முதல் George Panayiotou என்பவருடன் டேட்டிங் செய்து வந்த எமி ஜாக்சன், அவர் மூலம் குழந்தைக்கு தாயானார். ஆனால் இந்த ஜோடி 2021ஆம் ஆண்டில் பிரிந்தது.  அதன் பின்னர் எமி ஜாக்சன், பிரித்தானியாவின் பிரபல நடிகர் எட் வெஸ்ட்விக்கை (எட்வர்டு ஜாக் பீட்டர் வெஸ்ட்விக்) காதலித்து வந்தார். இந்த நிலையில் இவர்கள் இருவரும் திருமண பந்தத்தில் இணைந்துள்ளனர். 


இவர்களின் திருமணம் தொடர்பான புகைப்படங்களை எமி ஜாக்சன் தனது சமூக வலைதளப்பக்கத்தில் பதிவிட்டார். தற்போது இணையத்தில் இந்த புகைப்படங்கள் வைரலாகி வரும் நிலையில், ரசிகர்கள் பலர் புதுமணத் தம்பதிக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றன. 


Advertisement

Advertisement