இன்றுவரை தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடம்பிடித்து நடித்து வருகின்றார். அஜித் ,விஜய் ,சிம்பு ,சூர்யா ,விக்ரம் என பெரிய ஹீரோக்களுடன் ஜோடி போட்டு நடித்து வரும் இவர் தற்போது வெளியாகிய அஜித்தின் "குட் பேட் அக்லி " திரைப்படத்தில் சூப்பராக நடித்து ரசிகர்களை கவர்ந்தார்.
இதனை தொடர்ந்து மணிரத்னம் இயக்கத்தில் "thugh life " எனும் படத்தில் நடித்து முடித்துள்ளார். படம் அடுத்த மாதம் வெளியாகவுள்ளது. இதனால் படத்திற்கான புரொமோஷன் வேலைகள் மிகவும் பரபரப்பாக நடைபெற்று வருகின்றது. மேலும் படக்குழு அதிகமாக ஊடகங்களிற்கு நேர்காணல் வழங்கி வருகின்றனர்.
இந்த நிலையில் கே .எஸ் ரவிக்குமாரின் நேர்காணல் ஒன்றில் அவர் போர் ஒரு விடயத்தை கூறியுள்ளார். அதாவது " மன்மதன் அம்பு சூட்டிங் அப்போ மிட் நைட் ஒரு மூன்று மணி இருக்கும் திரிஷா பால்கனில நின்னு " i am the queen of this world என கத்துறாங்க நான் மாதவன் எல்லாம் பயந்து ஓடி போய் பாத்தா இப்புடி கத்துறாங்க அதுக்கப்புறம் அவங்கள பொன்னியின் செல்வன் படத்தில் ராணியாக நடிக்கும் போது தான் பார்த்தேன் " என கூறியுள்ளார். இதற்கு திரிஷா சிரித்தபடி வெட்கப்பட்டுள்ளார்.
Listen News!