• May 18 2025

ரூ.2 கோடி மதிப்புள்ள வைர நெக்லஸ்.. நடிகை கழுத்தில் அல்ல, நடிகரின் கழுத்தில்..!

Sivalingam / 1 year ago

Advertisement

Listen News!

பொதுவாக நடிகைகள் தான் கழுத்தில் வைர நகைகள் அணிந்து வருவார்கள் என்பதும் அந்த நகைகள் கோடிக்கணக்கான மதிப்பில் இருக்கும் என்பதையும் பார்த்து இருக்கிறோம். ஆனால் பிரபல நடிகர் ஒருவர் இரண்டு கோடி ரூபாய் மதிப்புள்ள வைரல் நகைகள் அணிந்து சினிமா விழா ஒன்றுக்கு வந்திருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. 

மும்பையில் சமீபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட பிரபல பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங் கோட் சூட் அணிந்து படு ஸ்டைலாக வந்த நிலையில் அவரது உடை உள்பட எதையுமே யாரும் கவனிக்கவில்லை. அவர் கழுத்தில் அணிந்திருந்த நெக்லைசைதான் அனைவரும் ஆச்சரியத்துடன் பார்த்தனர். 

முறுக்கு சங்கிலி போல் இருக்கும் அந்த வைர நெக்லஸ் 2 கோடி ரூபாய் மதிப்பு என்று தகவல் வெளியாகிய நிலையில் இந்த தகவலை கேட்டு அந்த நிகழ்ச்சிக்கு வந்த அனைவருமே ஆச்சரியமடைந்தனர்.

பிரபல நடிகைகளே கோடிக்கணக்கான மதிப்பில் நெக்லஸ் அணிவது வெகு அரிதாக இருக்கும் நிலையில் ரன்வீர் சிங் 2 கோடி ரூபாய் மதிப்புள்ள வைர நெக்லஸ் அணிந்து இருந்தது ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது. 

ஏற்கனவே ரன்வீர் சிங் நகைகளுக்காகவும் உடைகளுக்காகவும் பல கோடியை செலவழித்து வருவதாக கூறப்பட்ட நிலையில் சமீபத்தில் தான் இந்த 2 கோடி ரூபாய் நெக்லஸை அவர் வாங்கி இருப்பதாகவும் கூறப்படுகிறது. ரன்வீர்சிங் மனைவி தீபிகா படுகோன் கூட அதிகமான நகைகளை அணிய மாட்டார் என்பதும் மிகவும் குறைவாகவே நகைகளை அணிவார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement