• May 23 2025

திரையை விட நிஜத்தில் அவர் இன்னும் சிறந்தவர் விஜய் சேதுபதிக்கு பிரபல இயக்குனர் புகழாரம் !

Nithushan / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் உழைப்பிற்கு பெயர் போன நடிகர் விஜய் சேதுபதி.நடிப்பைத் தாண்டி  தயாரிப்பாளர், பாடகர், நிகழ்ச்சி தொகுப்பாளர் மற்றும் பாடலாசிரியர் என பலதுறைகளில் ஜொலிக்கிறார் இன்று.தனக்கான கதைகளை தேர்ந்தெடுத்து நடிப்பதில் மிகச் சிறந்தவர் என்றே கூற வேண்டும்.கதாநாயகன் தவிர குணச்சித்திர மற்றும் வில்லன் கதாபாத்திரங்களிலும் தனது சிறந்த நடிப்பை வெளிபடுத்தி ரசிகர்களை தன்வசப்படுத்தி வருகிறார் இவர்.


இந்நிலையில் இவர் குறித்தான ஓர் விமர்சனத்தை தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டிருக்கிறார் இயக்குனர். ராம் கோபால் வர்மா.தனது  முதலெழுத்துக்களால் RGV என பெரிதும் அறியப்படும் இவர் ஹிந்தி , கன்னட படங்கள் மற்றும்  தெலுங்கு சினிமாவில் அவரது படைப்புகளுக்காக அறியப்பட்டவர்.


ராம் கோபால் வர்மா தனது பதிவில் அவரை திரையில் பலமுறை பார்த்த பிறகும் , உண்மையான விஜய் சேதுபதியை சந்தித்த பின்பு தான் உணர முடிந்தது  திரையை விட நிஜத்தில் அவர் இன்னும் சிறந்தவர் என்று குறிப்பிடடதுடன் இருவரும் சந்தித்து கொண்டபோது எடுத்துக்கொண்ட புகைப்படத்தையும்  பகிர்ந்திருக்கிறார்.

Advertisement

Advertisement