• Aug 12 2025

''கூலி' இசை விழாவில் ரஜினியின் நேரடி விமர்சனம்..! ரசிகர்கள் விசனம்..!

luxshi / 3 hours ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள புதிய படம் “கூலி” ஆகஸ்ட் 14 அன்று வெளியாகவிருக்கிறது. 


இந்நிலையில் தமிழகத்தில் மட்டுமல்லாமல், கேரளம், கர்நாடகம் மற்றும் ஆந்திர மாநிலங்களில் “கூலி” பட டிக்கெட் விற்பனை அபாரமாக இடம்பெற்று வருகின்றது. 


இதனால், படத்தின் முதல் நாள் வசூல் ரூ. 150 கோடியை எட்டும் என்று திரையுலக வட்டாரங்கள் கணித்துள்ளன.

இது இவ்வாறு இருக்க, கூலி திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் நடிகர் ரஜினிகாந்த் கூறிய கருத்துக்கள் தற்போது சமூக வலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. 


அவர் உடல் தோற்றம் அடிப்படையில் சக நடிகர்கள் மற்றும் கலைஞர்களைப் பற்றி  கூறிய சில வார்த்தைகள் பலருக்கு முகச்சுழிப்பாக உள்ளன.

“முதலில் பார்த்தபோது ‘என்ன சொட்டையாக இருக்கிறார்? சரியாக இருப்பாரா?’ என நடிகர் சௌபின் சாகிர் பற்றி நினைத்தேன்” என்றார்.

இதேவேளை நடிகை ஸ்ருதி ஹாசன் குறித்து “கிளாமர் அதிகம்” என்று கூறி சிரித்தார். 


இசையமைப்பாளர் அனிருத் பற்றி “அவரின் இசைக் கச்சேரிக்கு பாட்டு கேட்க சிலர் வருகிறார்கள். ஆனால் அனிருத்தை பார்க்க பெண்கள் தான் அதிகம் வருகிறார்கள்” என்றும் குறிப்பிட்டார்.

இதனிடையே நடிகர் ஆமீர் கான் பற்றி “பாலிவுட்டில் ஷாருக்கான் மற்றும் சல்மான் கான் இருவரும் இருக்கிறார்கள். நடுவில் குள்ளமாக ஆமீர் கான் இருக்கிறார்” என்று குறிப்பிட்டார்.


இந்நிலையில் ரஜினியின் நேரடி மற்றும் உருக்கமான பேச்சு சில ரசிகர்களுக்கு நகைச்சுவையாகவும், சிரிப்பாகவும் இருக்கின்றது என்றாலும், சம்பந்தப்பட்டவர்கள் மனநிலையைப் பொருட்படுத்தாமல் அவர்களை விமர்சிப்பது சரியல்ல எனவும் பல்வேறு விமர்சனங்களும் எழுந்துள்ளன.


“ஒருவரின் குறைகளை எடுத்துரைத்தால், அவரைப் பாராட்ட வேண்டுமா?” என்ற கேள்வி சமூக வலைத்தளங்களில் எழுந்து வருகிறது. 

இந்நிலையில் ரஜினிகாந், இனிமேல்  நடிகர்களின் மதிப்பையும், மரியாதையையும் கருத்தில் கொண்டு பேச வேண்டுமென ரசிகர்கள் வேண்டுகோள் விடுக்கின்றனர்.





Advertisement

Advertisement