• May 18 2025

நடிப்புக்காக மட்டுமே உன்னைப் பார்த்தேன்...! – நடிகை ஹரிப்ரியாவை கலாய்த்த ராதாரவி!

subiththira / 2 months ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் சர்ச்சைக்குரிய கருத்துக்களால் அடிக்கடி பேச்சுக்குரியவராக இருப்பவர் நடிகர் ராதாரவி. தனது நகைச்சுவை கலந்த பேச்சு மற்றும் நேர்மையான விமர்சனங்களால் அவரை பல காரணங்கள் சர்ச்சைக்குள் தள்ளியிருக்கின்றன. தற்போது, நடிகை ஹரிப்பிரியாவைப் பற்றி கூறிய ஒரு கருத்து மீண்டும் வைரலாகி வருகிறது.

தமிழ், கன்னடம் மற்றும் மலையாள திரையுலகில் பிசியாக இருக்கும் நடிகை ஹரிப்ரியா. இவர் பற்றி நடிகர் ராதா ரவி கூறிய கருத்துக்கள் தற்பொழுது சமூக ஊடகங்களில் வைரலாகி வருகின்றது.  அவர் சமீபத்தில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில், ஹரிப்பிரியாவைப் பற்றிய ஒரு கேள்விக்கு பதிலளிக்கும் போது சில நகைச்சுவை கலந்த வார்த்தைகளைக் கூறியுள்ளார்.


பெரும்பாலும் நகைச்சுவை என்ற பெயரில் பேசப்படும் சில கருத்துக்கள் சிலரை பாதிக்கக் கூடிய வகையில் காணப்படும். அந்த வகையில் ராதாரவி சொல்லிய இந்த வசனம், ஹரிப்பிரியாவை கலாய்ப்பதற்கா? அல்லது நடிப்பை குறைக்கும் வகையிலா? என்பது சமூக வலைதளங்களில் தற்போது விவாதத்துக்குரியதாக மாறியுள்ளது.

நடிகர் ராதாரவி, தனது தீவிரமான நகைச்சுவைப் பாணியில், ஹரிப்பிரியாவை 'நடிப்புக்காக தான் பார்த்தேன் என்னைப் பார்த்து ஏன் அம்மா பயப்படுகிறாய்’ எனக் கூறியுள்ளார். இந்தக் கருத்தை சிலர் அவரைக் கிண்டல் செய்யும் முயற்சியாக எடுத்துள்ளதாக கருத்துத் தெரிவிக்கிறார்கள்.

Advertisement

Advertisement