விஜய் டீவியில் விறுவிறுப்பான நிகழ்ச்சிகள் மூலம் நம்மைச் சிரிக்க வைத்து வந்தவர் தான் தொகுப்பாளினி பிரியங்கா தேஷ்பாண்டே. சின்னத்திரை ரசிகர்களிடம் ஒரு திடமான இடத்தைப் பிடித்துள்ள இவர், சமீபத்தில் தன்னுடைய நீண்ட நாள் காதலரான DJ வசியை திருமணம் செய்து கொண்டார்.
இத்திருமணம் ரொம்பவே வித்தியாசமான முறையில், பல நெருங்கிய நட்சத்திரங்கள் மற்றும் குடும்பத்தினர் மத்தியில் கோலாகலமாக நடைபெற்றது. இந்த நிகழ்வுகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் அனைத்தும் சமூக வலைத்தளங்களில் தீவிரமாக வைரலாகியிருந்தது.
பிரியங்கா – வசி திருமணம் கடந்த வாரம் சென்னையில் நடைபெற்றது. இந்தக் கல்யாணத்தில் விஜய் டீவியின் நெருக்கமான நண்பர்கள் அமீர், பாவனி, நிரூப், மதுமிதா மற்றும் அசார் போன்ற பிரபலங்கள் கலந்து கொண்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் கலந்து கொண்ட பிரியங்காவிடம் "திருமணத்துக்கு பின் வாழ்க்கை எப்படி இருக்கு?" எனக் கேட்கப்பட்டிருந்தது. அதற்கு பிரியங்கா “Feeling நல்லா இருக்கு , ஜாலியா இருக்கு என்றதுடன் நாம யாராவது நம்மளப் புரிந்து கொண்டவர்களை சந்தித்தோம் என்றால், வாழ்க்கை ரொம்ப happyயாக இருக்கும்." எனக் கூறியிருந்தார்.
மேலும், “ஒரு ஜோடியா இருக்கனும்னா, அவர்கள் முதலில் நண்பர்களாக இருக்கனும். அந்த நட்பில் இருக்கும் புரிதல்தான், காதலாகவும், பிறகு திருமண வாழ்க்கையாகவும் மாறும். அது தான் ஒரு ரொம்ப அழகாக இருக்கும்." என்றும் கூறியிருந்தார்.
Listen News!