• Apr 26 2025

"ஜனநாயகன்" படத்தைக் கைப்பற்றிய ரோமியோ பிக்சர்ஸ்...! சந்தோசத்தில் ரசிகர்கள்..!

subiththira / 5 days ago

Advertisement

Listen News!

தென்னிந்திய திரையுலகில் தனது திறமையான நடிப்பால் அதிகளவு மக்களின் மனங்களைக் கவர்ந்தவர் நடிகர் விஜய். மாஸ் ஹீரோவாகத் திகழ்ந்த இவர், தற்போது தனது இறுதித் திரைப்படமான 'ஜனநாயகன்' மூலம் திரையுலகை விட்டு விலக இருப்பதாகத் தகவல்கள் வெளியாகியிருந்தன. இது ரசிகர்களிடையே மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியிருந்தது.


விஜயின் இறுதித் திரைப்படமான ‘ஜனநாயகன்’ இயக்குநர் எச்.வினோத் அவர்களின் கதையின் அடிப்படையில் உருவாகி வருகின்றது. இவர் ஏற்கனவே துணிவு போன்ற மாஸ் ஆக்‌ஷன் படங்களை இயக்கியவர் என்பதனால் இப்படத்திற்கான எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.

இது விஜயின்  இறுதிப் படம் என்பதனால் வியாபார ரீதியாகவும் 'ஜனநாயகன்' படத்தின் உரிமைகளை வாங்கப் பல தயாரிப்பு நிறுவனங்கள் போட்டியில் இறங்கியுள்ளன. இந்நிலையில், நம்பத்தகுந்த வட்டாரத் தகவல்களின் படி, ரோமியோ பிக்சர்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் ராகுல், இப்படத்தின் தமிழக உரிமையை ரூ.90 கோடிக்கு வாங்கியுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.



ரோமியோ பிக்சர்ஸ் நிறுவனம் கடந்த சில வருடங்களில் பல பெரிய படங்களை வெளியிட்டுள்ள நிறுவனம். தற்போது ‘ஜனநாயகன்’ படத்தின் தமிழக தியேட்டரியல் உரிமையை ரூ.90 கோடிக்கு வாங்கியது என்பது, அவர்கள் இந்தப் படம் மீது வைத்திருக்கும் நம்பிக்கையைக் காட்டுகின்றது.

Advertisement

Advertisement