கடந்த ஆண்டு வெளியான டிராகன் திரைப்படம் இளைஞர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. நகைச்சுவை, காதல், உணர்ச்சி என பல அம்சங்களை இணைத்து உருவாக்கப்பட்ட இப்படம், வெளியான சில நாட்களிலேயே சமூக வலைத்தளங்களில் ட்ரெண்டாகி, வசூல் ரீதியாகவும் வெற்றியைப் பதிவு செய்தது.
குறிப்பாக இளம் தலைமுறையினரின் வாழ்க்கை முறையை நகைச்சுவையாகவும் உணர்ச்சிவசப்படுத்தியும் காட்டிய விதம் ரசிகர்களை கவர்ந்தது.

இந்த வெற்றியின் தொடர்ச்சியாக, டிராகன் 2 உருவாக இருப்பதாக சமீபத்தில் தகவல்கள் வெளியாகின. இதனால் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது. முதல் பாகம் முடிந்த விதத்தை கருத்தில் கொண்டு, இரண்டாம் பாகம் கதையை எந்த திசையில் கொண்டு செல்லும் என்ற கேள்வி தற்போது பேசுபொருளாகியுள்ளது.
இந்நிலையில், நடிகரும் இயக்குநருமான பிரதீப் ரங்கநாதன் சமீபத்தில் நிகழ்ச்சியொன்றில் பேசிய கருத்துக்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.
அவர் அதன்போது, “முதலில் ஒரு நண்பன் மாதிரி இருந்த நான், இப்போது இயக்குநராகவும் மாறிட்டேன். இப்போது எனக்கு நடிப்பு, இயக்கம் என்று இரண்டிலும் பெஸ்ட் ஆன ஒரு விஷயம் இருக்கு. அது சீக்கிரமே என்ன என்று உங்களுக்குத் தெரியும்,” என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்த கூற்று ரசிகர்களிடையே பல்வேறு யூகங்களை கிளப்பியுள்ளது. அவர் புதிய கதைக்களத்துடன் இயக்கம் செய்ய உள்ளாரா? அல்லது தனது அடுத்த படத்தில் வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடிக்கப் போகிறாரா? என்ற கேள்விகள் எழுந்துள்ளன. சிலர் இதை டிராகன் 2 குறித்த அப்டேட்டாகவே பார்க்கின்றனர்.
Listen News!