தமிழ் சினிமாவில் சூர்யா நடிப்பில் வெளியாகிய மாயாவி படத்தில் மாற்றுத்திறனாளியாக நடித்த நடிகை விஷ்ணு பிரியா, “கடவுள் தந்த அழகிய வாழ்வு” என்ற படத்தின் மூலம் ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பெற்றவர்.
அதற்குப் பிறகு இவர் பெரிதாக சினிமாவில் ஈடுபடவில்லை குடும்ப வாழ்க்கையில் தனது கவனத்தை செலுத்தினார். இவருக்கு திருமணம் செய்து இரண்டு குழந்தைகள் உள்ளன, ஆனால் கணவருக்கு உடல் நலக் குறைவு உள்ளதென பேசப்பட்டது.
இந்த நிலையில், நடிகை விஷ்ணுபிரியாவின் தந்தை சூரிய நாராயணன், கொடைக்கானல் பகுதியிலிருந்து மர்ம நபர்களால் கொடூரமாக கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

அவரை வீட்டில் நாற்காலையில் கட்டி வைத்து , வாய் மற்றும் மூக்கை டேப்பால் ஒட்டிவிட்டு, நகை மற்றும் மோதிரங்களை திருடியதாகவும், கொலை சம்பவம் வெளியில் தெரியாமல் இருக்க சிசிடிவி கேமராவின் ஹார்ட் டிஸ்கையும் எடுத்துச் சென்று தப்பியதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
சுற்றுலா பயணிகள் போல வந்து தயங்கிவர்களே இந்த சம்பவத்தை செய்துள்ளனர். இந்த தகவல் தற்போது பலருக்கும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது.
Listen News!