விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி நல்ல வரவேற்பை பெற்று வரும் சீரியல்களில் ஒன்று பாண்டியன் ஸ்டோர்ஸ். இந்த சீரியலில் தற்பொழுது கோமதி மற்றும் பாண்டியனுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டு வருகிறது.
இந்நிலையில், தற்பொழுது இந்த சீரியலின் ப்ரோமோ வெளியாகியுள்ளது. அதில்,பாண்டியன் கோமதியைப் பார்த்து ஞாபவம் இருக்கா கல்யாணம் ஆன புதுசில அண்ணனுங்களுக்கு பயந்து கொண்டு ஊர் ஊராக சுத்தி இருக்கோம் என்கிறார்.

அதைக் கேட்ட கோமதி அதுக்குப் பிறகு இண்டைக்குத் தான் எனக்கு பின்னாடி திரிஞ்சிருக்கீங்க என்று சொல்லுறார். பின் தலை வலிக்குது என்று நீ சொன்னது எல்லாம் என்கூட பேசத்தான் என்றதையே நான் புரிஞ்சிக்காமல் உன்னை ரொம்ப கஷ்டப்படுத்திட்டன் என்று சொல்லி மன்னிப்புக் கேட்கிறார்.
அதைத் தொடர்ந்து கோமதி கதிருக்கு உங்களுக்கு தெரியாம கல்யாணம் பண்ணி வைச்சது நான் பண்ண பெரிய தப்புத் தான் என்று சொல்லுறார். அதைக் கேட்ட பாண்டியன் நீ என்னை விட்டு எங்க போயிடப்போற என்ற எண்ணத்தில உன்னை பெருசா கண்டுக்காமல் விட்டிட்டன் என்று சொல்லுறார்.
பின் பாண்டியன் உனக்காக இனிமேல் என்னை மாத்துறேன் என்று சொல்லுறார். இதுதான் இனி நிகழவிருப்பது..
Listen News!