• Apr 27 2025

பாண்டியனின் பிள்ளைகளை தரதரவென இழுத்து போகும் போலீஸ்! தந்திரமாக போட்டுக் கொடுத்த முத்துவேல்! பரபரப்பான திருப்பத்தில் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2

Aathira / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் அடுத்து என்ன நடக்கும் என்பதற்கான ப்ரோமோ வெளியாகி உள்ளது. அதில் என்ன நடக்குது என்று பார்ப்போம்.

அதில், ராஜிக்காக பாண்டியனுக்கு விழுந்த அடியை நினைத்து, அப்பாவ அடிச்சிருக்காங்க நாங்க சும்மாவா இருக்கிறது என்று, பாண்டியனின் மூன்று பிள்ளைகளும் ராஜியின் அண்ணனை வெளுத்து வாங்குகிறார்கள்.

இதை அறிந்த ராஜியின் சித்தப்பா, அவர்களை வெட்டுவதற்காக கத்தியை எடுத்துக் கொண்டு செல்ல, முத்து அவர்களை தடுத்து நிறுத்தி இந்த டைம்ல யோசிச்சு தான் முடிவு எடுக்கணும் என்று சொல்லுகிறார்.


மேலும் சரவணனுக்கு கல்யாணம் வச்சிருக்காங்க. இந்த டைம்ல மாப்பிள்ளை இல்லாட்டி, அண்ணன் தம்பி மூணு பேரையும்  போலீஸ் பிடிச்சுட்டு போயிட்டா என தந்திரமாக யோசனை கூறுகிறார்.


அதன்படி முத்து வீட்டார் போலீசில் கம்ப்ளைன்ட் கொடுக்க, ராஜியின் அண்ணனை அடித்ததற்காக பாண்டியனின் மூன்று பிள்ளைகளையும் போலீசார் அரெஸ்ட் பண்ணி போலீஸ் ஸ்டேஷனில் வைத்துள்ளார்கள்.

இந்த விஷயத்தை அறிந்த பாண்டியன் போலீஸ் ஸ்டேஷனுக்கு விரைந்து சென்று அங்கு அவர்களை விடுமாறு கேட்க, இனி கோர்ட்ஸ்ல சந்திக்கலாம் என்று காவல் நிலையத்தில் இருந்த போலீசார் சொல்லுகிறார். இதைக் கேட்டு எல்லாரும் அதிர்ச்சியாக  நிற்கின்றார்கள். இதுதான் தற்போது வெளியான ப்ரோமோ.

Advertisement

Advertisement